இவ்வளவு கம்மி விலையா? பல்சரை ஓரம்கட்டபோகும் ஹோண்டா பைக் வந்தாச்சு!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் (HMSI) புதிய NX200 அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள HMSI ரெட் விங் மற்றும் பிக்விங் டீலர்ஷிப்களில் இந்த பைக் கிடைக்கும். NX200பைக் ஹோண்டா CB200X இன் மறுபெயரிடப்பட்ட எடிசன் ஆகும். இந்த புதிய மாடல் ஹோண்டாவின் NX500 பைக்கிலிருந்து ஈர்க்கப்பட்டது மற்றும் அந்த மாடல் போன்ற வடிவமைப்பு கூறுகளை கொண்டுள்ளது..
NX200 ஒரு வலுவான பெட்ரோல் டேங்க், அக்ரஸிவான கிராபிக்ஸ் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட லுக் மற்றும் அழகியல் எளிமைக்கான அனைத்து-எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளது. கூடுதலாக, மெல்லிய எல்இடி இன்டிகேட்டர் மற்றும் எக்ஸ்-வடிவ எல்இடி டெயில் லேம்ப் அதன் நவீன தோற்றத்தை மேம்படுத்துகின்றன. இந்த பைக் OBD2B விதிமுறைகளுக்கு இணங்கும் 184.4cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜினால் இயக்கப்படுகிறது.

இந்த இன்ஜின் 8,500 RPM இல் 12.5 kW பவரையையும் 6,000 RPM இல் 15.7 Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இது சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றவாறு சாஃப்டான பவர் விநியோகத்தை வழங்குகிறது. இன்ஜினின் வடிவமைப்பு சிறப்பான மைலேஜை வழங்குகிறது.
NX200 பைக்ரைடர் வசதி மற்றும் கண்ட்ரோலை மேம்படுத்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. இந்த பைக்கின் ஒரு தனித்துவமான அம்சம் புளூடூத் கனெக்டிவிட்டியுடன் 4.2-இன்ச் முழு-டிஜிட்டல் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மேப், கால், நோட்டிஃபிகேஷன் மற்றும் SMS அலர்ட்காக ஹோண்டா ரோட்சிங்க் ஆப்பை சப்போர்ட் செய்கிறது.
கூடுதல் வசதிக்காக, பைக்கில் பயணத்தின் போது எலெக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான USB C-வகை சார்ஜிங் போர்ட் உள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல்திறனுக்கான டூயல்-சேனல் ABS உடன் பாதுகாப்பு அம்சங்களும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) வெவ்வேறு சாலை மேற்பரப்புகளில் பின்புற வீல் இழுவையை மாற்றியமைத்து சப்போர்ட் செய்கிறது.
அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் மென்மையான கியர் மாற்றங்களை உறுதி செய்கிறது மற்றும் திடீரென வேகமாக டவுன்ஷிஃப்ட் செய்யும் போது பின்புற வீல் லாக்காவதை தடுக்கிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட ரைடிங் அனுபவத்திற்கு பங்களிக்கின்றன. NX200 மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் பெர்ல் இக்னியஸ் பிளாக். இந்த பைக் ரூ1.68 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
HMSI இன் மேனேஜிங் டைரக்டர் கூறும்போது: "ஹோண்டாவில், வாடிக்கையாளர்களின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து புதுமையின் எல்லைகளை தாண்டிச் சென்றுள்ளோம். புதிய NX200 என்பது எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் அற்புதமான பைக்குளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் சரியான அம்சமாகும்."
டிரைவ்ஸ்பார்க் கருத்து: NX200 செயல்திறனை cutting-edge தொழிற்நுட்பத்துடன் இணைத்து ஒரு சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் வடிவமைப்பு டூவீலர்களில் சாகசத்தைத் தேடுபவர்களுக்கு ஏற்றது. அதே நேரத்தில் அதன் மேம்பட்ட அம்சங்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications








