ஆக்டிவா, டியோவை போல இதற்கும் மார்கெட் அடிமையாக போகுது.. 160 சிசி திறனில் ஸ்கூட்டரா! பர்க்மேன் கொஞ்சம் ஓரமா போ!

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), இந்தியாவில் ஒன்றிற்கும் மேற்பட்ட புதுமுகு டூ-வீலர் மாடல்களுக்கு பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது. என்எக்ஸ் 125 (NX125), ஹோண்டா பீட் (Honda Beat), என்பிஎஃப் 125 (NPF 125), என்டபிள்யூஎக்ஸ் 125 (NWX 125), சிஜி 160 (CG 160) மற்றும் எஸ்சிஆர் 125 (SCR 125) ஆகிய இரண்டுசக்கர வாகன மாடல்களுக்கே அது பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது. இது நடைபெற்று பல நாட்கள் ஆகிவிட்டன.

இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் புதிய இணைப்பாக பிசிஎக்ஸ் 160 (PCX 160) மாடலை அது சேர்த்திருக்கின்றது. அதாவது, புதிதாக பிசிஎக்ஸ் 160 ஸ்கூட்டருக்கே ஹோண்டா நிறுவனம் பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது. இதுபற்றிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

Honda pcx 160 patented in india

இருப்பினும், இந்த வாகனம் பலரின் கவனத்தை இப்போதே கவரத் தொடங்கி இருக்கின்றது. அப்படியான தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. பிசிஎக்ஸ் 160 ஸ்கூட்டரை பேடண்ட் பதிவு செய்ய அது வழங்கிய ஆவணங்களின் வாயிலாக சில முக்கிய விபரங்கள் வெளியே கசிந்துள்ளது. இந்த தகவலே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

பிசிஎக்ஸ் 160 ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். பெரிய விண்ட் ஸ்கிரீன், மெல்லிய எல்இடி டிஆர்எல், மிருகங்களின் கண்களைப் பிரதிபலிக்கக் கூடிய ஹெட்லைட், ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை மற்றும் 3டி வகை டெயில் லைட் (வால்பகுதி) உள்ளிட்ட அம்சங்களையே அது தாங்கியிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Honda pcx 160 scooter pic

இதன் லுக்கும்கூட சற்றே தனித்துவமானதாக உள்ளது. இதுவே பலரை கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, முன் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பெரிய விண்ட்ஸ்கிரீன், தாழ்வு மற்றும் உயரமான அமைப்பைக் கொண்ட இருக்கை ஆகியவை இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இது ஓர் 160 சிசி ஸ்கூட்டர் என்பதாலும் பலரின் கவனம் இதன் பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக, அதிக ஆற்றலை விரும்பும் ஸ்கூட்டர் காதலர்களை மிகப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. 157 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றது.

Honda pcx 160 scooter pic

15.8 பிஎஸ் மற்றும் 15 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஓர் மோட்டாரே இது ஆகும். இந்த எஞ்சின் வி-மேடிக் பெல்ட் டிரைவ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், சிட்டி மற்றும் ஹை-வே இரண்டிற்குமான டூ-வீலராக இது இருக்கும் என்பது தெரிகின்றது.

மேலும், இது லிட்டர் ஒன்றிற்கு 40 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையில் மைலேஜ் தரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், லுக், எஞ்சின் மற்றும் மைலேஜை தருவது என அனைத்திலும் சிறந்த ஸ்கூட்டராக பிசி 160 இருக்கும் என்பதும் தெளிவாக தெரிகின்றது.

இதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் பெஸ்ட்டான ஸ்கூட்டராக பிசி 160 இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மிக சிறந்த பார்வை திறனை வழங்கக் கூடிய எல்சிடி திரை, பன்முக தகவல்களை வழங்கும் வசதியுடன் வழங்கப்பட இருக்கின்றது.

இது டிரிப் மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருளின் அளவு, பேட்டரியின் அளவு, வி-பெல்ட்டுடைய தரம் பற்றிய தகவலை வழங்கும் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, யுஎஸ்பி சி டைப் சார்ஜிங், இருக்கைக்கு அடியில் 30 லிட்டர் அளவில் ஸ்டோரேஜ் வசதி, ஸ்மார்ட் சாவி உள்ளிட்ட வசதிகளையும் பிசிஎக்ஸ் 160 கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டாவின் ஆக்டிவா மற்றும் டியோ ஆகிய ஸ்கூட்டர்களைப் போல நல்ல வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 10:37 [IST]
English summary
Honda pcx 160 patented in india exploring anticipated features and launch possibilities
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X