கிளட்ச் புடிக்க வேணாம்! ஹோண்டா பைக்குகளில் வருகிறது புதிய டெக்னாலஜி!

கடந்த ஆண்டு CBR650R மற்றும் CB 650R இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டாவின் புதுமையான e-கிளட்ச் சிஸ்டம், பிற மாடல்களிலும் விரிவாக்கப்பட உள்ளது. ஜப்பானில் ரெபெல் 250 இந்த ஆட்டோமெட்டிக் கிளட்சை கொண்ட முதல் மாடலாக இருக்கும். இந்த சிஸ்டம் ரைடர்கள் கிளட்சை கையாளாமல் எளிதாக ஸ்டார்ட் செய்து, நிறுத்தி, கியர்களை மாற்ற அனுமதிக்கிறது. இது சீரான ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.

e-கிளட்ச் அமைப்பு மேனுவல் கிளட்சுக்கு பழகியவர்களுக்கு, இன்னும் வசதி தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கிளட்சை தானாகவே இணைத்து துண்டிக்கும். இருப்பினும் மேனுவல் கிளட்ச் ஒரு ஆப்ஷனாக உள்ளது. தேவைப்படுபவர்கள் அதை பயன்படுத்தலாம் மென்மையான கியர் மாற்றங்களையும், அதிக ரெஸ்பான்ஸிவ் சிஸ்டத்தை விரும்பும் ரைடர்களுக்கு இந்த அம்சம் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

Honda Rebel 250 E-clutch System

விலை நிர்ணயம் குறித்து கூறுவதானால், ஹோண்டா ரெபெல் 250 638,000 யென் (சுமார் ரூ. 3.56 லட்சம்) விலையில் விற்பனைக்கு வருகிறது. e-கிளட்ச் கொண்ட வகை 693,000 யென் (சுமார் ரூ. 3.87 லட்சம்) விலையில் கிடைக்கிறது, இது சுமார் ரூ. 30,000 அதிகமாக உள்ளது. இந்த கூடுதல் செலவு ஆட்டோமெட்டிக் கிளட்ச் அமைப்பின் நன்மையை அளிக்கிறது.

ஹோண்டா ரெபெல் 250 130/90 அளவிலான டயர்களுடன் 16 இன்ச் வீல்களை முன்புறத்திலும், 150/80 அளவிலான டயர்களுடன் பின்புறத்திலும் கொண்டுள்ளது. அதன் சஸ்பென்ஸன் சிஸ்டம் பாரம்பரிய டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மற்றும் பின்புறத்தில் டூயல்-ஷாக் அப்ஸர்பர்களைக் கொண்டுள்ளது. இந்த பைக் 134 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது மற்றும் நிலையான அம்சமாக டூயல்-சேனல் ABS உடன் வருகிறது.

Honda Rebel 250 E-clutch System

இன்ஜினை பொருத்தவரை, இது 26 bhp பவர் மற்றும் 22 Nm டார்க்கை உருவாக்கும் 249 cc சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆட்டோமெட்டிக் கிளட்ச் வகை 174 கிலோ எடையுள்ளது, இது அதன் சாதாரண பைக்கை விட 3 கிலோ அதிகமாக உள்ளது.

KTM அதன் சில பைக்குகளில் இதேபோன்ற கிளட்ச்லெஸ் அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த டிரெண்ட் பைக் துறையில் தொழிற்நுட்பம் மூலம் ரைடர் வசதியை மேம்படுத்துவதில் அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது. இது வெற்றி பெற்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல இந்த தொழிற்நுட்பத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda Rebel 250 E-clutch System

ஹோண்டா ரெபெல் 250 இன் ஆட்டோமெட்டிக் எடிசன் நகர்ப்புற சூழலுக்கு ஏற்றது. இது அதிகமான போக்குவரத்து அல்லது குறுகிய சாலைகளில் ரைடிங்கை எளிதாக்குகிறது, கியர் மாற்றும்போது மேனுவல் கிளட்ச் இயக்கங்களை நீக்கி, காலில் உள்ள கண்ட்ரோல்களை பயன்படுத்தி ரைடிங்கை சாஃப்டாக மாற்றுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெபெல் 250 இன் இரண்டு எடிசன்களும் சுமார் 47 kmpl மைலேஜை வழங்குகின்றன. ஆட்டோமெட்டிக் கிளட்ச் மாடலை தேர்ந்தெடுப்பது திறன் நிலையானதாகவே இருக்கும். ஹோண்டாவின் e-கிளட்ச் அமைப்பு செயல்திறன் அல்லது ரைடர் கட்டுப்பாட்டை பாதிக்காமல் பயன்பாட்டை எளிதாக்குவதன் மூலம் பைக் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதை குறிக்கிறது. இந்த தொழிற்நுட்பம் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 12:30 [IST]
English summary
The Honda Rebel 250 is set to feature an automatic e-clutch system for a seamless riding experience. This innovation enhances convenience for riders, especially in urban settings, without compromising performance.
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X