ராயல் என்ஃபீல்டு எல்லாம் ஒரம்போ! இனி இந்த வண்டி தான் செம கெத்து!
ஹோண்டா நிறுவனம் தனது ரெபெல் 500 க்ரூஸர் மற்றும் எக்ஸ்- ஏடிவி ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் டெலிவரியை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த வாகனங்கள் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தனது பிக் விங் டீலர் ஷிப் மூலம் தனது ரெபெல் 500 பைக் மற்றும் எக்ஸ்- ஏடிவி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டர் இந்தியா முழுவதும் உள்ள டீலர் ஷிப்களில் விற்பனையாகி வருகிறது. இதில் ரெபல் 500 பைக் டில்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் ரூ5.12 லட்சம் என் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது மேட் பிளாக் மெட்டாலிக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த ரெபெல் 500 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 471 சிசி லிக்யூட் கூல்டு பெரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 45.6 பிஎச்பி பவரை 8500 ஆர்பிஎம்மிலும், 43.3 என்எம் டார்க் திறனை 6000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டள்ளுது.
இந்த இன்ஜின் சிறப்பான டார்க் திறனை வழங்கும் வகையில் உள்ளது. இது ஒரு ரெட்ரோ க்ரூஸர் ரக பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த பைக்கில் சீட் 690 மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மார்கெட்டில் உள்ள ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கிற்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

ஹோண்டா எக்ஸ்- ஏடிவி ஸ்கூட்டரை பொருத்தவரை இந்தியாவில் ரூ11.91 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. என்ன ஸ்கூட்டருக்கு ரூ12 லட்சம் என்ற விலையா என நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் இந்த விலைக்கு தகுந்தார் போல பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளது பைக்கை விட பவர்ஃபுல்லாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரில் 745 சிசி லிக்யூட் கூல்டு பெரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 57 எச்பி பவரை 6750 ஆர்பிஎம்மிலும், 69 என்எம் டார்க் திறனை 4750 ஆர்பிஎம்மிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 5 இன்ச் முழு கலர் டிஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா ரோடுசிங் ஆப் கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது. இதன் மூலம் கால், எஸ்எம்எஸ் அலர்ட், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், வாய்ஸ் கமெண்ட்ஸ், ரைடு பை ஒயர் டெக்னாலஜி, 4 விதமான ரைடிங் மோடுகள் - ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட், ரெயின், மற்றும் கிரெவல், ஹோண்டா செலெக்டபிள் டார்க் கண்ட்ரோல் ஆப்டிமல் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் கிராஃபைட் பிளாக் மற்றும் பியர்ல் கிளார் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ரெபெல் 500 மற்றும் எக்ஸ்-ஏடிவி ஆகிய வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வாகனங்களின் விலை அதிகமாக இருந்தாலும் சிலர் இந்த வாகனங்களின் திறனிற்காக வாங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









