30 நாளில் 4.29 லட்சம் வண்டிகளை வித்துட்டாங்க! அப்படி இதுல என்னதான் இருக்குது?
ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 4.29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜூலை மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களையும் கடந்த காலாண்டிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமும் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மட்டும் அந்நிறுவனம் 4.29,147 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதே நேரம் இந்த வாகன எண்ணிக்கையில் 3,88,812 வாகனங்கள் இந்திய மார்கெட்டில் விற்பனை செய்ய்பட்டுள்ளது. மீதம் உள்ள 40,335 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்திற்கு நம்பர்1 இடத்தை பிடிக்கும் கனவு கடந்த மாதம் தகர்ந்து போய்விட்டது ஹீரோ நிறுவனம் 5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனத்தை முந்த ஹோண்டா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 13,75,120 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் 12,28,961 வாகனங்கள் இந்திய மார்கெட்டில்விற்பனையாகியுள்ளது. பாக்கியுள்ள 1,46.159 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா டூவீலர் உள்நாட்டு விற்பனையில் சற்று வீழ்ச்சி சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 4,82,597 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வெறும் 3,88,812 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

அதே நேரம் ஏற்றுமதியி்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 36202 வாகனங்கள் ஏற்றுமதியான நிலையில் கடந்த ஜூன் மாதம் 40,335 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டு மொத்த விற்பனையில் இந்நிறுவனம் 17.28 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 5,18,799 வாகனங்கள் விற்பனையான நிலையில் கடந்த ஜூன் மாதம் 4,29,147 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களை ஈரக்கும் வகையில் புதிய வகையான வாகனங்களை களம் இறக்கி வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் வாகனங்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானது தான் ஹோண்டா நிறுவனம் மீண்டும் தனது விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









