கம்மி விலையில் 2 பைக்குகள் வெளியீடு! ஹோண்டா அறிமுகத்துலேயே இதான் பெஸ்ட் போல!

ஹோண்டா நிறுவனம் தனது 25வது ஆண்டு விழாவை கெண்டதும் வகையில் 2 புதிய பைக்குகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சிபி125 ஹார்னட் மற்றம் ஷைன் 100 டிஎக்ஸ் ஆகிய பைக்குகளை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளுக்கான புக்கிங்கும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இன்று தனது ஷைன் 100 டிஎக்ஸ் மற்றும் சிபி 125 ஹார்னட் ஆகிய பைக்குகளை இன்று வெளியிட்டுள்ள நிலையில் தனது ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கை இளைஞர்களை கவரும் வகையில் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி பியர்ல் இக்னீஷியல் பிளாக், இம்பெரியல் ரெட் மெட்டாலிக், அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக், ஜென்னி கிரே மெட்டாலிக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

Honda Shine 100 DX and CB 125 Hornet Unveiled

இந்த பைக்கின் வடிவமைப்பில் முன்பக்கம் உள்ள ஹெட்லைட்டில் குரோம் இன்சர்ட்கள், எக்ஸாஸ்ட் பைப் பகுதியில் ஹீட் ஷீல்டு, பெட்ரோல் டேங்க் பகுதியில் விஷூவலாக பெரிய ஸ்டிக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது போக முன்பக்க வீலில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கள், பின்பக்கம் 5 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ட்வின் ஷாக் அப்சர்பர்கள், 17 இன்ச் அலாய் வீல் ட்யூப் லெஸ் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 98.98 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.28 பிஎச்பி பவரையும், 8.04 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது மார்கெட்டில் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறது.

Honda Shine 100 DX and CB 125 Hornet Unveiled

ஹோண்டா சிபி 125 ஹார்னட் பைக்கை பொருத்தவரை முன்பக்கம் ஷார்ப்பான ஹெட்லைட்டுகள், முன்பக்கம் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்சன் இந்த செக்மெண்டிலேயே முன் முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சீட் ஸ்பிளிட் சீட் செட்டப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 4.2 இன்ச் கொண்டி டிஎஃப்டி டிஸ்பிளே வழங்ப்பட்டுள்ளது. இது ஹோண்டா ரோடுஸிங் ஆப் உடன் இணைந்து செயல்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இது போக இந்த பைக்கில் கூடுதல் ஆப்ஷன்களாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், முழு எல்இடி லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது அனைத்து வாகனங்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் மார்கெட்டில் விற்பனையாகி வரும் டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த பைக்கிற்கான புக்கிங்கும் ஆகஸ்ட் 1ம் தேதி தான் நடக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலை டூவீலர்களுக்கு நல்ல மவுசு இருக்கும் நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த குறைந்த விலை பைக்குகளை களம் இறக்குகிறது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி புக்கிங் துவங்கும்போது இதற்கான விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 14:20 [IST]
English summary
Honda shine 100 dx and cb 125 hornet unveiled in india
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+