ஸ்பிளெண்டர் சோலி முடின்ச்! அடி மாட்டு விலையில் ஹோண்டாவின் புதிய பைக்! நாளைக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆகுது!
இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Honda Two-wheelers), வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதே இதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இந்த வரிசையில் புதியதாக ஒரு டூவீலரை ஹோண்டா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) ஆகும். ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நாளையில் இருந்து (ஆகஸ்ட் 1) தொடங்கப்படவுள்ளன.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னர், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை ஹோண்டா தொடங்கவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஷைன் 100 பைக்கை காட்டிலும், ஷைன் 100 டிஎக்ஸ் பிரீமியமானது.
எனவே ஹோண்டா நிறுவனத்தின் லைன்-அப்பில் ஷைன் 100 பைக்கிற்கு மேலாக ஷைன் 100 டிஎக்ஸ் நிலைநிறுத்தப்படவுள்ளது. ஹோண்டா ஷைன் 100 பைக்கை விட அகலமான எரிபொருள் டேங்க்கை ஷைன் 100 டிஎக்ஸ் பெற்றுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களை கவரும் கிராபிக்ஸ்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ஷைன் 100 பைக்கை விட, ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கை பிரீமியமாக காட்டுகின்றன. பியர்ல் இன்ஜினஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், அத்லெட்டிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஜெனி க்ரே மெட்டாலிக் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் கிடைக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில், 98.98 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 7.28 பிஹெச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.04 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் 100 பைக் 68,862 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Delhi Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பிரீமியமானது என்பதால், அதன் ஆரம்ப விலை அனேகமாக 72 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.
அதாவது ஹோண்டா ஷைன் 100 பைக்கை காட்டிலும், ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை சுமார் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Expected Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் வருகையால், விற்பனையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








