இனி ஹீரோ ஷோரூம்லாம் காத்து வாங்க போகுது! நம்ப முடியாத குறைவான விலையில் 100 சிசி பைக்கை களமிறக்கிய ஹோண்டா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) பைக் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் புதிய வேரியண்ட் (Variant) ஆகும்.
ஹோண்டா ஷைன் 100 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே 98.98 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின்தான் (Engine), ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.3 ஹெச்பி பவரையும், 8.04 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு (Fuel Tank Capacity) 9 லிட்டர்கள் மட்டுமே. ஆனால் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 1 லிட்டர் அதிகரிக்கப்பட்டு, 10 லிட்டர்களாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் ரியல் டைம் மைலேஜ் மற்றும் இருக்கும் எரிபொருளில் இன்னும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும்? என்பது போன்ற ரீட்-அவுட்கள் உடன் புதிய எல்சிடி டிஜிட்டல் டிஸ்ப்ளே, 17 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களும், புதிய ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

கருப்பு, சிகப்பு, நீலம் மற்றும் க்ரே என ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். இவை அனைத்தின் விலையும் ஒன்றுதான். அதாவது ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் அனைத்து கலர் ஆப்ஷன்களின் விலையும் 74,959 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புத்தம் புதிய ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது ஹோண்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் மூலமாகவோ, ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். டெலிவரி (Delivery) பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் வருகை, இந்திய சந்தையில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மற்றும் ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் இது மிகவும் விலை குறைவானது என்பதால், ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக 100 சிசி பைக் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்க, ஷைன் 100 டிஎக்ஸ் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








