ஹீரோவை கதற விடும் ஹோண்டா பைக்! விலை இவ்ளோதானா! ஜப்பான்காரன் வெறித்தனமா தயாரிச்சிருக்கான்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் (Entry-level Commuter Bikes) ஒன்று ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில், 32,110 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 20,519 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 11,591 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹோண்டா ஷைன் 100 பைக், விற்பனையில் 56.49 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, ஹோண்டா ஷைன் 100 பைக், விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 30,243 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த நவம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 32,110 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த நவம்பர் மாதத்தில், 1,867 ஹோண்டா ஷைன் 100 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
இந்த வகையில் பார்த்தால், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விற்பனை, 6.17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆரம்ப விலை 64,004 ரூபாயாக உள்ளது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 70,507 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் ஆகிய 2 பைக்குகளிலும், 98.98 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான ஷைன் 100, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இதன் காரணமாகதான் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹோண்டா ஷைன் 100 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








