எவ்ளோ தட்டுனாலும் தாங்கும்! இவ்ளோ கம்மியான விலையில் ஹோண்டா பைக்கா! சாரை சாரையா ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் (Honda Shine). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஹோண்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,54,561 ஷைன் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two-Wheelers), ஹோண்டா ஷைன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 2 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) மற்றும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஆகியவை உள்ளன. 3வது இடத்தை பிடித்திருப்பதுடன் மட்டுமல்லாது, விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் ஹோண்டா ஷைன் பைக் பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2025 Honda Shine 100

அதாவது கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,42,763 ஹோண்டா ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 1,54,561 ஆக உயர்ந்துள்ளது. இது 8.26 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் பைக் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹோண்டா ஷைன் 125 மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகியவை ஆகும். இதில் ஹோண்டா ஷைன் 125 மாடலில், 123.94 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2025 Honda Shine 100 Side Design

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.93 kW பவர் மற்றும் 11 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 87,193 ரூபாய் முதல் 91,945 ரூபாய் வரையிலான விலைகளில் ஹோண்டா ஷைன் 125 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபக்கம் ஹோண்டா ஷைன் 100 பைக்கில், 98.98 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.43 kW பவர் மற்றும் 8.05 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 68,600 ரூபாய் என்ற விலையில் ஹோண்டா ஷைன் 100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்றாகும்.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு ஹோண்டா ஷைன் பைக்கை வாடிக்கையாளர்கள் மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை அமர்க்களப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாடியில் வழங்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் ஸ்டைலாக இருப்பது, நன்கு பேலன்ஸ் செய்யப்பட்ட சஸ்பென்ஸன் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின் ஆகியவை எல்லாம் ஹோண்டா ஷைன் பைக்கின் பிளஸ் பாயிண்ட்கள் என நாங்கள் கருதுகிறோம். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ஹோண்டா ஷைன் பைக்கை வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாற்றியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 23:53 [IST]
English summary
Honda shine 125 100 sales report february 2025 price engine options
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+