ஓலா எல்லாம் ஒரம் போ! ஹோண்டா ஷைன் இவி பைக் வந்தா எல்லாரும் காலி தான்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே க்யூசி 1 மற்றும் ஆக்டிவா இ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் அடுத்ததாக புதிய எலெக்ட்ரிக் டூவீலரை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை ஸ்கூட்டராக இல்லாமல் எலெக்ட்ரிக் பைக்காக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் டிரெண்ட் தற்போது அதிகரித்து வருகிறது. ஓலாவின் ரோடுஸ்டர் எக்ஸ், ஒபன் ரோன் இசட், ரிவோல்ட் ஆர்வி, ப்யூர் இவி எக்கோ டிரிஃப்ட், உள்ளிட்ட எலெக்ட்ரிக் பைக்குகள் ஏற்கனவே மார்கெட்டில் உள்ளன. இந்நிலையில் இந்த மார்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஹோண்டா நிறுவனம் தயாராி வருகிறது.

Honda Shine EV

இந்நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக்கை காப்புரிமை செய்வதற்காக வழங்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தங்களில் வெளியாகியுள்ளதாக ரஸ்லைன் வெப்சைட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த செக்மெண்டில் அந்நிறுவனம் பட்ஜெட் பைக்கை தான் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காப்புரிமை வரைபடத்தை பார்க்கும் போது இது பட்ஜெட் இவியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரைபடத்தில் இந்த ஸ்கூட்டரில் ஆக்டிவா இ போல ஸ்வாப்பபிள் பேட்டரி இடம் பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஸ்வாப்பிள் பேட்டரி சிஸ்டம் தற்போது பெங்களூருவில் மட்டுமே இருக்கிறது. இந்த பேட்டரியையே தங்கள் புதிய எலெக்ட்ரிக் பைக்கிலும் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கலாம்.

Honda Shine EV

இந்த பேட்டரி ஒன்று 1.5kwh பவர் கொண்டது. மொத்தம் 2 பேட்டரிகள் என்றால் 3Kwh பவரில் இந்த பேட்டரி பவரில் இந்த பைக் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த பைக் ஏற்கனவே பெட்ரோலில் இயங்கும் ஒரு பைக்கின் ஃபிளாட்ஃபார்மை எடுத்து அதை எலெக்ட்ரிக்காக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்ததாக தெரிகிறது. ஆம் அந்நிறுவனத்தின் ஷைன் பைக் தான் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரப்போகிறது.

இந்த பைக்கில் பெரிய சிங்கிள் பீஸ் சீட், 17 அல்லது 18 இன்ச் அலாய் வீல், ஆர்எஸ்யூ டெலஸ்கோபிக் ஃபோர்க், ட்வின் ஷாக் அப்சர்பர்கள், டியூப் ஹேண்டில் பார் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் பைக் என்பதால் முழுமையான டிஜிட்டல் கிளஸ்டம் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே போன் ஃபேன்ஸியான விஷயங்கள் எதுடும் இருக்காது.

Honda Shine EV

Img Source: Rushlane

இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் ஷைன் 100மற்றும் 125 போல குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கும் எ ன எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக் சிறப்பாக விற்பனையாகி வரும் பைக்காக இருந்தது. தற்போது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் வரவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக் இந்தியாவில் நல்ல விற்பனையை பெற்றுள்ள நிலையில் தற்போது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறைவாக இருந்தால் நிச்சயம் ஜாக்பாட் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 9:45 [IST]
English summary
Honda shine ev patent leak swappable battery revealed
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X