டிவிஎஸ், பஜாஜ் தலையில் இடியாய் இறங்கும் ஹோண்டா தயாரிப்பு! விலை இவ்ளோதானா! ஷோரூம்ல கூட்டம் அலை மோதீட்டு இருக்கு
இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை ஹோண்டா ஷைன் பதிவு செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ஹோண்டா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1,42,751 ஷைன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை, 1,68,908 ஆக உயர்ந்துள்ளது.

இது 18.3 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers), ஹோண்டா ஷைன் 3வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 2 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) மற்றும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஆகிய டூவீலர்கள் உள்ளன. ஹோண்டா ஷைன் பைக், இந்திய சந்தையில் 100 சிசி மற்றும் 125 சிசி என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஹோண்டா ஷைன் 100 சிசி பைக் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 70,521 ரூபாயாக உள்ளது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 87,748 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 92,499 ரூபாய் ஆகவும் உள்ளது.
நாங்கள் இந்த செய்தியில் கூறியுள்ள அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) என்பதுடன், ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 125 பைக்குகளின் OBD2B விதிமுறைகளுக்கு இணக்கமான மாடல்களின் விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதில், ஹோண்டா ஷைன் 100 பைக்கில் 98.98 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 125 பைக்கில் 123.94 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹோண்டா ஷைன் 100 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். மறுபக்கம் டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) மற்றும் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், ஹோண்டா ஷைன் 125 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








