ஹீரோ ஸ்பிளெண்டரை கதற விடும் ஹோண்டா பைக்! இவ்ளோ கம்மியான விலையிலா வித்துட்டு இருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் (Honda Shine). ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான பைக்குகளை போலவே, ஷைன் பைக்கிலும், 'ஸ்மூத்' ஆன இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோண்டா ஷைன் பைக் எடை குறைவானது மற்றும் கையாள்வதற்கு மிகவும் எளிமையானது.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான பைக்குகளில் ஒன்றாக, ஹோண்டா ஷைனை மாற்றியுள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும், ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

Honda Shine 100 DX

ஹோண்டா ஷைன் பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,85,059 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,81,835 ஹோண்டா ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 3,224 ஹோண்டா ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹோண்டா ஷைன் பைக் விற்பனையில் 1.77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Honda Shine 100 DX Side View

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes September 2025), ஹோண்டா ஷைன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா ஷைன் பைக்கின் நேரடி போட்டி மாடலான ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் பைக் மொத்தம் 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100), ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) மற்றும் ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125) ஆகியவை ஆகும்.

இதில், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆரம்ப விலை 63,191 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 69,694 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆரம்ப விலை 78,539 ரூபாயாக உள்ளது.

இவை அனைத்துமே தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் ஆகிய 2 பைக்குகளிலும், 98.98 சிசி இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 125 பைக்கில், 123.94 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஷைன் 100, ஷைன் 100 டிஎக்ஸ், ஷைன் 125 பைக்குகளின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு (Fuel Tank Capacity) முறையே, 9 லிட்டர்கள், 10 லிட்டர்கள், 10.5 லிட்டர்களாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மிகச்சிறந்த மாற்றாக ஹோண்டா ஷைன் கருதப்படுகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில், நீடித்து உழைக்க கூடிய, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹோண்டா ஷைன் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2025, 17:41 [IST]
English summary
Honda shine sales report september 2025 1 77 per cent growth
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+