ஹோண்டாவின் இந்த பைக்கை வாங்கியவர்களுக்கு வர போகும் போன் கால்! எல்லாத்தையும் இலவசமா செய்து தருவாங்க

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு தரமான பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், விலையுயர்ந்த பைக்குகளை அறிமுகம் செய்யும்போது ஹோண்டா சற்று சறுக்கல்களை காண்கிறது. ஏனெனில், பவர்ஃபுல்லான பைக்குகளை அறிமுகம் செய்வதில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), கவாஸாகி (Kawasaki) போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஹோண்டா நிறுவனம் குறைந்த சிசி என்ஜினை கொண்ட பைக்குகளை சற்று அதிக விலையில் விற்பனை செய்கிறது.

இதன் காரணமாகவே, சில விலையுயர்ந்த ஹோண்டா பைக்குகள் நம் இந்தியாவில் கவனத்தை பெறாமலேயே போய் உள்ளன. அந்த வகையில், இந்தியர்கள் பெரியதாக கண்டுக்கொள்ளாமல் போன ஹோண்டா பைக்குகளுள் ஒன்று, ஹோண்டா சிபி300ஆர் (CB300R) ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் நாக்டு-ரக மோட்டார்சைக்கிளாக சிபி300ஆர் விளங்குகிறது.

honda voluntary recalling

விற்பனை பெரிய அளவிற்கு இல்லாத இந்த பைக்கின் பிரபலத்தை மேலும் மக்கள் மத்தியில் குறைக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஒரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதுதான், விற்பனை செய்யப்பட்ட பைக்குகளை திரும்ப அழைக்கும் நடவடிக்கை ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்குகளில் சில பிரச்சனைகளை கண்டறிந்ததை அடுத்து அதனை சரி செய்து கொடுக்கும் முயற்சியாக ஹோண்டா இந்த திரும்ப அழைக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது.

அதுவும், இப்போது விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிபி300ஆர் பைக்குகள் திரும்ப அழைக்கப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரையில் ஹோண்டா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன. அதாவது, சுமார் 7இல் இருந்து 5 வருடங்களுக்கு முன் உற்பத்தி செய்த சிபி300ஆர் பைக்குகளை இப்போது ஹோண்டா திரும்ப அழைக்கிறது.

honda voluntary recalling

இந்த திரும்ப அழைப்பிற்கான காரணம், அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்குகளின் ஹெட்லைட் சிஸ்டத்தில் (Headlight System) பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுவதை இப்போது ஹோண்டா கண்டுப்பிடித்ததை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் முடிவு கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையினால், பைக்கின் ஹெட்லைட் செயல்படுவதை நிறுத்திக் கொள்வதை ஹோண்டா நிறுவனம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது.

2018- 2020 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்குகளின் ஹெட்லைட் சிஸ்டத்தில் வழங்கப்பட்ட பிரிண்டட் சர்க்யூட் போர்டு (Printed Circuit Board) மற்றும் வயர்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பழுதுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பைக்கின் ஹெட்லைட் அவ்வப்போது அணைந்து, அணைந்து எரிகின்றன அல்லது ஒரேடியாக அணைந்து விடுகின்றன.

honda voluntary recalling

மொத்தம் எத்தனை சிபி300ஆர் பைக்குகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன என்கிற விபரத்தை ஹோண்டா வெளியிடவில்லை. இதுகுறித்து ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபி300ஆர் மோட்டார்சைக்கிளின் ஹெட்லைட் சிஸ்டத்திற்குள் உள்ள பிரண்டட் சர்க்யூட் போர்டின் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதை நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

பயணத்தின்போது ஹெட்லைட் சிஸ்டத்தில் உள்ள அடிப்படையான வயர்களும் உடைப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் விளைவாக ஹெட்லைட் விட்டுவிட்டு எரியலாம் அல்லது முற்றிலுமாக அணைந்து போகலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கஸ்டமர்களை தொடர்புக் கொள்ளும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கை வாங்கிய கஸ்டமர்கள் தங்களது பைக்கும் இந்த பிரச்சனை உடன் உள்ளதா என்பதை வாகனத்தின் விஐஎன் எண்ணை கொண்டு ஹோண்டா பிக் விங் (Big Wing) இணையத்தள பக்கத்தில் ஆராய்ந்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த பிரச்சனைக்கான பழுது பார்ப்பை ஹோண்டா இலவசமாக செய்துக் கொடுக்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் பின்னர் பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைக்கப்படுவது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றே. இது வாகனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை குறைக்க கூடியதாக இருந்தாலும், அதேநேரம் ஹோண்டா நிறுவனத்தின் மீதான மதிப்பை கூட்டுகிறது. ஏனெனில், செய்த தவறை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 12, 2025, 21:13 [IST]
English summary
Honda voluntary recalling cb300r motorcycles that manufactured between 2018 to 2020
மேலும்... #honda motorcycle #recall #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X