நாடே வாங்கும் மாருதி கார் கூட இவ்வளவு விலையில் இருக்காது! பணக்காரர்களை டார்க்கெட் செய்து புது ஹோண்டா ஸ்கூட்டர்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் புதியதாக விலையுயர்ந்த அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை பார்த்திருக்கிறோம், ஆனால் அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டிற்கு முற்றிலும் புதியது ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இது மேக்ஸி-ஸ்கூட்டர் ஆகும். அதாவது, வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து மாறுப்பட்டது. X-ADV என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பவர்ஃபுல்லான ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள புதிய ஹோண்டா X-ADV அட்வென்ச்சர் ஸ்கூட்டரை ஹோண்டாவின் பிக்விங் (BigWing) டீலர்ஷிப் ஷோரூமில் வாங்கலாம். வருகிற ஜூன் மாதத்தில் இருந்து இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அட்வென்ச்சர் மேக்ஸி-ஸ்கூட்டர் என்கிற வித்தியாசமான உடலமைப்பில் இருக்கும் இந்த X-ADV ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் கண்கள் டிசைனில் இரு எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

honda x-adv maxi scooter

ஹெட்லைட்கள் உடன் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளும், டர்ன் இண்டிகேட்டர்களும் உள்ளன. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும், இந்த ஸ்கூட்டரின் முன் சக்கரம் 17-இன்ச்; பின் சக்கரம் 15-இன்ச் ஆகும். அட்வென்ச்சர் ரக 2-வீலர்களில் முன் சக்கரம் அளவில் பெரியதாக வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறான சக்கர அமைப்பின் காரணமாகவே ஹோண்டா X-ADV ஸ்கூட்டரின் நிற்கும் ஸ்டைல் ரொம்ப அழகாக உள்ளது.

இருக்கைக்கு அடியில் 22 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ், மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கு யுஎஸ்பி-சி சார்ஜர் வசதி உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரை தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏதுவானதாக விளங்க வைக்கின்றன. ஸ்கூட்டர் பார்க்க நன்கு உயரமானதாக தெரிந்தாலும், டிரைவர் இருக்கையில் அமர்ந்தால் கீழே தரை மிக அருகாமையில் உள்ளது.

honda x-adv maxi scooter

அந்த அளவிற்கு டிரைவர் சீட் மிகவும் தாழ்வாகவும், நன்கு சாய்ந்துக் கொள்ளக்கூடிய வகையிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், எவ்வளவு தொலைவு பயணத்தை மேற்கொண்டாலும், இந்த ஸ்கூட்டரில் முதுகு வலி இருக்காது. ஸ்கூட்டர்களை பொதுவாக தொலைத்தூர பயணங்களுக்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஏனெனில், ஸ்கூட்டர்களின் என்ஜின் அளவில் சிறியவையாக இருப்பதினால். ஆனால், புதிய ஹோண்டா X-ADV ஸ்கூட்டரில் அந்த பிரச்சனை எதுவும் கிடையாது.

இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் அளவில் பெரியதான மற்றும் ஆற்றல்மிக்க 745சிசி ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினை வைத்து மாருதி ஆல்டோ (Maruti Alto) காரை ஓட வைக்கலாம். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43.1 கிலோவாட்ஸ் மற்றும் 69 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மென்மையாக இயங்கக்கூடிய இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பயணத்தின்போது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை வழங்கக்கூடியது. க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை கொண்ட இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், மழை, கிராவெல் என்கிற நான்கு ரைடு மோட்களில் ஸ்கூட்டரை ஓட்டலாம்.

இவை இல்லாமல், ரைடர் தனக்கு ஏற்ற ரைடு மோட்-ஐ பிரத்யேகமாக உருவாக்கி கொள்ளவும் ஹோண்டா X-ADV அனுமதிக்கிறது. இந்த செயல்கள் அனைத்தையும் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளேவில் மேற்கொள்ளலாம். இந்த டிஸ்பிளே ஆனது ஹோண்டா ரோடுசிங்க் (Honda RoadSync) மென்பொருளில் உள்ளது. கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்களை டார்க்கெட் செய்து மீண்டும் ஒரு வெளிநாட்டு வாகனத்தை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி உள்ளது. விலையாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரூ.11.90 லட்சம் ஆனது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 22, 2025, 5:00 [IST]
English summary
Honda x adv maxi scooter launched in india check price features engine all details here
மேலும்... #honda motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+