எல்லாருக்கும் இப்படியொரு தந்தை கிடைக்கனும்... மகன் கேட்டதும் ஸ்கூட்டருக்காக 12 லட்ச ரூபாயை வாரி இரைச்சுட்டாரு!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர், எக்ஸ்-அட்வ் (X-ADV) என்கிற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் ஆகும். இதனை ஸ்கூட்டர் என்றே சொல்ல முடியாத அளவிற்கு பெரிய அளவிலான தோற்றத்துடன் பார்ப்பதற்கு பைக் போன்று உள்ளது. இதனாலேயே இத்தகைய ஸ்கூட்டர்களை மேக்ஸி-ஸ்கூட்டர் என அழைக்கின்றனர். இவ்வாறான மேக்ஸி-ஸ்கூட்டர்கள் பல பிராண்ட்களில் உலகின் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவிற்கு இத்தகைய ஸ்கூட்டர்கள் ஏற்றவையாக இருக்காது என்கிற தயக்கத்தினாலேயே பல முன்னணி 2-வீலர்கள் கூட மேக்ஸி-ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயக்கம் காட்டி வந்தன.

இருப்பினும், ஹோண்டா நிறுவனம் பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு அதன் அளவில் பெரியதான மற்றும் விலைமிக்க எக்ஸ்-அட்வ் என்கிற மேக்ஸி-ஸ்கூட்டரை இந்தியாவில் சமீபத்தில் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த புதிய ஹோண்டா மேக்ஸி-ஸ்கூட்டரை இந்தியாவில் முதல் கஸ்டமர் டெலிவிரி பெற்று உள்ளார்.

honda x-adv scooter delivery

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஹோண்டா பிக்விங் (BigWing) டீலர்ஷிப் ஷோரூமில் பிராண்ட்-நியூ எக்ஸ்-அட்வ் ஸ்கூட்டரை இந்தியாவில் முதல் கஸ்டமர் டெலிவிரி பெறும் காட்சிகளை காணலாம். விலையுயர்ந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக பிக்விங் டீலர்ஷிப் ஷோரூம்களை ஹோண்டா பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மெக் பரத்வாஜ் என்பவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், இந்தியாவில் முதல் ஆளாக எக்ஸ்-அட்வ் ஸ்கூட்டரை டெலிவிரி பெற்றது இவராக தான் இருக்கும். ஷோரூமில் இருந்து ஸ்கூட்டரை ஓட்டி செல்லும் முன், ஷோரூமில் வைத்து கேக் வெட்டி மெக் பரத்வாஜ் கொண்டாடுவதையும், டெலிவிரி தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் இந்த முதல் ஹோண்டா எக்ஸ்-அட்வ் ஸ்கூட்டர் எந்த பகுதியில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. டெல்லி என்சிஏஆர் பகுதியில் உள்ள டீலர்ஷிப் ஷோரூமாக இருக்கலாம். எக்ஸ்-அட்வ் ஸ்கூட்டரின் தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல், இது ஸ்கூட்டரா அல்லது பைக்கா என்பதே பலருக்கு குழப்பமாக இருக்கும்.

அந்த அளவிற்கு அட்வென்ச்சர் பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டும் கலந்த கலவையாக ஹோண்டா எக்ஸ்-அட்வ் மேக்ஸி ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படுகின்ற 745சிசி, இணையான-இரட்டை சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 58.6 பிஎஸ் மற்றும் 69 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பெரிய அளவிலான ஸ்கூட்டர் என்பதால், அதற்கேற்ப 13.2 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்கை எக்ஸ்-அட்வ் கொண்டுள்ளது. அதேபோல், இருக்கைக்கு அடியிலும் 22 லிட்டர்கள் கொள்ளளவில் நன்கு பெரியதான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இது அட்வென்ச்சர் பைக்கின் கலவை என்பதற்கு சாட்சியாக, முன்பக்கத்தில் 17 இன்ச்சிலும், பின்பக்கத்தில் சற்று சிறியதாக 15 இன்ச்சிலும் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், அட்வென்ச்சர் பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கை ஆனது 820மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்படுகிறது. இரு சக்கரங்களிலும் க்னோபி (Knobby) போன்றதான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சரான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கு ஹோண்டா எக்ஸ்-அட்வ் போன்றதான ஸ்கூட்டர்களை மக்கள் வாங்க ஆரம்பித்துள்ளதை வைத்து அறிய முடிகிறது. மெக் பரத்வாஜை பார்த்து மேலும் சிலர் ஹோண்டா எக்ஸ்-அட்வ் மேக்ஸி ஸ்கூட்டரை வாங்குவார்கள் என்பதால், இந்த ஸ்கூட்டரின் விற்பனை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 25, 2025, 16:47 [IST]
English summary
Honda x adv scooter delivered to first indian customer check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+