ரூ. 80000 தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கும் ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப்! இப்ப இதோட விலை எவ்வளவு தெரிமா?

பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் முன்னணி பைக் மாடல் ஒன்றின் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் (Honda XL750 Transalp) பைக்கின் விலையையே ஹோண்டா குறைத்து இருக்கின்றது. கொஞ்சம், நஞ்சம் ரூபாய் இல்லைங்க, மிகப் பெரிய அளவில் இந்த பைக்கின் விலையில் குறைப்பைச் செய்து இருக்கின்றது, ஹோண்டா. ரூ. 80 ஆயிரமே குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு பெரிதாக பலனளிக்கக் கூடியதாக இருக்குமா என்பது தெரியவில்லை.

ஏனெனில் ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் ஓர் பணக்காரர்களுக்கான பைக் மாடல் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 11 லட்சம் ஆகும். இந்த விலையிலேயே ரூ. 80 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. பணம் படைத்த இளைஞர்களுக்கு இந்த விலை குறைப்பெல்லாம் ஓர் பெரிய பொருட்டாகவே இருக்காது என தெரிகின்றது.

Honda xl750 transalp discount of rs 80 000

இதேபோல் இந்த விலை குறைப்பு அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்காது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. ஆகையாலேயே விலை குறைப்பு பெரிதாக பலனளிக்கக் கூடியதாக இருக்குமா என்பது தற்போது சந்தேகமாக மாறியுள்ளது. இந்த விலைக் குறைப்பு ஸ்டாக்கை கிளியர் செய்யும் விதமாகவே அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப, ஹோண்டா நிறுவனம் இன்னும் ஒரு சில வாரங்களில் எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலின் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, இது விற்பனைக்கு வரும் முன்னர் இருக்கும் அனைத்து அப்டேட் செய்யப்படாத மாடல்களும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Honda xl750 transalp

இப்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக்கில் 755 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 75 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதைமட்டுமல்ல இன்னும் பல அசத்தலான சிறப்புகளையும், அம்சங்களையும் இந்த பைக் தன்னுள் வைத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மிக முக்கியமாக இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி, வாய்ஸ் அசிஸ்ட் வசதி, எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டிராக்சன் கன்ட்ரோல், ரைடு பை வயர் வசதி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Honda xl750 transalp adv drive pic

இதுதவிர,ஸ்லிப்பர் கிளட்ச், ஐந்து விதமான ரைடிங் மோட்கள் மற்றும் எல்இடி லைட் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் ஓர் லாங் டிராவலுக்கான பைக் மாடல் ஆகும். இதற்கான அம்சங்கள் மிக தாராளமாக இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மிக முக்கியமாக யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் ஆகியவை இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளன. இத்துடன், 21 அங்குல வீல் முன் பக்கத்திலும், 18 அங்குல வீல் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், டூயல் டிஸ்க்குகள் முன் பக்கத்திலும், சிங்கிள் டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதே அம்சங்களுடன் இன்னும் மெருகேற்றப்பட்ட ஓர் பைக் மாடலாகவே ஹோண்டா எக்ஸ்எள் 750 டிரான்சால்ப் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த ஓர் பைக் மாடலாக ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் உ்ள்ளது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே ரூ. 80 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இது மாபெரும் விலை தள்ளுபடி என்பது நாம் இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 17:26 [IST]
English summary
Honda xl750 transalp offered with rs 80 000 discount to boost sales in india
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X