13 லட்ச ரூபாயில் பைக்கை அறிமுகம் செய்வதற்கு தனி தைரியம் வேணும்! கவாஸாகி பார்த்து பார்த்து உருவாக்கிய பைக்!
இந்திய கவாஸாகி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Indian Kawasaki Motors - IKM) நிறுவனம் அதன் புதிய மை26 கவாஸாகி வெர்சிஸ் 1100 (MY26 Kawasaki Versys 1100) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாகசப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்ற இந்த பைக், நகர்ப்புறச் சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்து விதமான பயணங்களுக்கும் மிகவும் உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவாஸாகி நிறுவனத்திற்கே உண்டான சாகச மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் மை26 வெர்சிஸ் 1100, மேம்படுத்தப்பட்ட 1,099சிசி இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின், அதிக சக்திவாய்ந்த செயல்பாடு மற்றும் உகந்த கியர் விகிதங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இது மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது.

மேலும், மேம்பட்ட எலெக்ட்ரானிக் ரைடர் உதவி பேக்கேஜ்ஜையும் இந்த பைக் உடன் பெறலாம். புதிய வெர்சிஸ் 1100, நிதானமான நிமிர்ந்த ரைடிங் பொசிஷன், நீண்ட டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் செட்-அப் (Suspension Set-up) மற்றும் எதிர் காற்றில் இருந்து ரைடரை முழுமையாக கவர் செய்யும் திறன் போன்ற அம்சங்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கவாஸாகி பைக்கில் ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள யுஎஸ்பி டைப்-சி அவுட்லெட் ஆனது பயணத்தின் போது மின் சாதனங்களை சார்ஜ் செய்ய உதவுகிறது. இந்த மேம்பாடுகளுடன், இந்த கவாஸாகி அட்வென்ச்சர் பைக் இப்போது முன்பு எப்போதையும் விட சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வெர்சிஸ் 1100, "மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே / மெட்டாலிக் டயப்லோ பிளாக்" வண்ணத்தில் கிடைக்கிறது.

இந்த புதிய கவாஸாகி பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.13 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். புதிய மை26 வெர்சிஸ் 1100 பைக்கின் 1099சிசி லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்-லைன் நான்கு-சிலிண்டர் DOHC என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 135 பிஎஸ் பவர் மற்றும் 7600 ஆர்பிஎம்-ல் 112 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, பைக்கின் முன் பகுதியில் ரீபவுண்ட் டேம்பிங் (வலது பக்கம்) மற்றும் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மென்ட் உடன் தலைக்கீழாக பொருத்தப்பட்ட 43மிமீ ஃபோர்க்கும், பின்புறத்தில் ரீபவுண்ட் டேம்பிங் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ரிமோட் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மென்ட் உடன் வாயுவால் இயங்கக்கூடிய, கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ரியர் ஷாக்கும் உள்ளது.

பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் முன்பக்கத்தில் 150மிமீ சஸ்பென்ஷன் டிராவலும், பின்பக்கத்தில் 152மிமீ டிராவலும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பைக்கின் நான்கு சிலிண்டர் என்ஜின் உடன் மேம்படுத்தப்பட்ட கவாஸாகி குயிக் ஷிஃப்டர் (KQS) துணைக்கருவியாகக் கிடைக்கும். இது கியர்களை விரைவாக மாற்றுவதற்கு உதவக்கூடியதாக உள்ளது.
இவற்றுடன், மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் மற்றும் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் வசதிகளையும் கொண்டுள்ள புதிய வெர்சிஸ் 1100 பைக்கின் உயிர்நாடியாக அமைந்துள்ள 1099சிசி லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்-லைன் நான்கு சிலிண்டர் என்ஜின், வெறும் பைக்கின் செயல்திறனை மட்டுமல்லாமல், பயண அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.

சிறந்த த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் (Throttle Response) மற்றும் அனைத்து RPM-களிலும் (குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வரம்பில்) வலுவான டார்க் திறனை வழங்கும் பைக்கின் என்ஜின், அதிக RPM-ல் கர்ஜனை ஒலி உடன் சிலிர்க்க வைக்கும் உணர்வை தருகிறது. இது, ஓட்டுநர்களுக்கு உடல் ரீதியாகவும், செவிப்புலன் ரீதியாகவும் இன்பமான அனுபவத்தை உறுதி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கவாஸாகி வெர்சிஸ் 1100 பைக் சவுகரியத்தையும், உற்சாகத்தையும் ஒரே நேரத்தில் விரும்பும் சாகசப் பயணிகளுக்கு ஏற்றது. என்ஜின் சிஸ்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உகந்த கியர் விகிதங்கள், பைக்கின் ஒட்டுமொத்த சக்தி விநியோகத்தையும் எரிபொருள் சிக்கனத்தையும் மேம்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications









