கார் வாங்குற விலையில் பைக்கை கொண்டுவந்தால் மார்க்கெட் தாங்குமா... கவாஸாகியின் புதிய தயாரிப்பு!
இந்திய கவாஸாகி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (India Kawasaki Motors), புதிய மை26 இசட்900 (MY26 Z900) மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இசட்-சீரிஸின் பாரம்பரியத்தை இது தொடர்கிறது. கூர்மையான, அதிக ஆக்ரோஷமான 'சுகோமி' வடிவமைப்பையும், மேம்பட்ட மின்னணு உதவி அம்சங்களையும் இந்த பைக் கொண்டிருக்கிறது.
நகர்ப்புற சாலைகளிலும், வளைந்து நெளிந்த மலைப்பாதைகளிலும் கூட, புதிய இசட்900 அசாத்தியமான பயண அனுபவத்தை வழங்குகிறது. இது ஒவ்வொரு ஓட்டுநருக்கும் அற்புதமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டில் கவாஸாகி இசட்1 மாடலுடன் தொடங்கிய கவாஸாகி இசட் பைக்குகள் பாரம்பரியத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான மைல்கல்லை இந்த வெளியீடு கொண்டாடுகிறது.

முதல் கவாஸாகி இசட்1 மாடல், அதன் அற்புதமான செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் தைரியமான பாணியால் மோட்டார்சைக்கிள் உலகையே மாற்றியமைத்தது. கவாஸாகியின் 'இசட்' பைக்குகளுக்கு உலகளாவிய அளவுகோலை அப்போதே அந்த மாடல் நிர்ணயித்தது. தற்போது, புதிய மை26 இசட்900 பைக் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, நவீன சஸ்பென்ஷன், மேம்படுத்தப்பட்ட மின்னணு தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுநருக்கு மிகவும் வசதியான அம்சங்களுடன் வெளியாகி, புதிய தரத்தை நிலைநாட்டுகிறது.
கவாஸாகி குயிக் ஷிஃப்டர் (KQS), எலெக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கவாஸாகியின் முதல் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல மேம்பட்ட எலெக்ட்ரானிக் அமைப்புகள், ஓட்டுநரின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. மை26 இசட்900 பைக், "மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே/ மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக்" மற்றும் "கேன்டி லைம் கிரீன்/ மெட்டாலிக் கார்பன் கிரே" ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.9,99,000/- இல் தொடங்குகிறது. புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் 948சிசி லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 125 பிஎஸ் மற்றும் 7,700 ஆர்பிஎம்-இல் 98.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கின் முன்பக்கத்தில் ரீபவுண்ட் டேம்பிங் மற்றும் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டபிலிட்டி உடன் 41 மிமீ இன்வெர்ட்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஷாக் ரீபவுண்ட் டேம்பிங் மற்றும் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டபிலிட்டி உடன் வாயுவால் இயங்கக்கூடிய, கிடைமட்டமாக பொருத்தப்பட்ட பேக்லிங்கும் வழங்கப்பட்டு உள்ளன.

முன்பக்க சஸ்பென்ஷன் டிராவலை (120 மிமீ) விட பின்பக்க சஸ்பென்ஷன் டிராவல் (140 மிமீ) 20மிமீ நீளமானதாக உள்ளது. மை26 இசட்900 பைக்கின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், சிறிய அளவில் புதிய ட்ரிபிள் எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்பக்கத்தில் ஒளி-வழிகாட்டும் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்இடி டெயில்லைட்டை சொல்லலாம்.
கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல் (KTRC), கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மென்ட் ஃபங்ஷன் (KCMF), இரட்டை-திசை கவாஸாகி குயிக் ஷிஃப்டர் (KQS), பவர் மோட்ஸ், எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல், ரைடியோலாஜி தி ஆப் (RIDEOLOGY THE APP) என்கிற மொபைல் செயலி உடன் கூடிய டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி இசட்900 பைக்கிற்கு இந்தியாவில் உண்மையில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளுக்கு அடுத்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 500சிசி+ பைக்காக இசட்900 விளங்குகிறது. முன்பை விட குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த கவாஸாகி பைக்கை இன்னும் பலரால் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









