முகத்தை மறைத்தப்படி வந்தவங்க எல்லாரும் இராணுவ வீரர்களா? பைக்கை கொடுத்து அனுப்பி வைச்சது யார் தெரியுமா?
அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவில் இருந்து தோன்றிய இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் எலக்ட்ரிக்கில் சூப்பர் பைக்கை உருவாக்கிய முதல் நிறுவனம் அல்ட்ராவொய்லெட் ஆகும். இந்த நிலையில், இந்திய இராணுவத்திற்காக தனது எலக்ட்ரிக் பைக்குகளை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலமாக, சில நாட்களுக்கு அல்ட்ராவொய்லெட்டின் எலக்ட்ரிக் பைக்குகளை இந்திய இராணுவத்தினர் பயன்படுத்தி உள்ளனர். அப்படி என்ன மாதிரியான அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்கை இந்திய இராணுவத்தினர் பயன்படுத்தினர் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து மார்க்கெட் பெரிதாகி கொண்டே வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக சமீப ஆண்டுகளில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான், அல்ட்ராவொய்லெட் ஆகும். ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனங்களை போன்று பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு அல்ட்ராவொய்லெட் செயல்படுகிறது.

கடந்த சில வருடங்களாக செயல்பட்டாலும், தற்போதைக்கு எஃப்77 (F77) என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் 2-வீலரை மட்டுமே அல்ட்ராவொய்லெட் விற்பனை செய்து வருகிறது. ஷாக்வேவ் (Shockwave) மற்றும் டெசராக்ட் (Tesseract) என புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) ஒன்றையும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றையும் சமீபத்தில் தான் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஆனால், இவற்றிற்கான டெலிவிரிகள் அடுத்த 2026ஆம் ஆண்டில்தான் துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில், இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவு மையம் (MRC) உடன் அல்ட்ராவொய்லெட் கூட்டணி சேர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மெட்ராஸ் படைப்பிரிவின் சார்பில் 5 நாட்களுக்கு பைக் பேரணி நடத்தப்பட்டது. இதற்கு அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தனது எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகளை வழங்கி உள்ளது.

இந்த பைக் பேரணி ஆனது மதிப்புமிக்க மெட்ராஸ் படைப்பிரிவின் வீரர்கள், வீர் நாரிஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பரந்த ஆயுதப்படை சமூகத்தை கௌரவிப்பதற்காக ஆகும். இந்திய ஆயுதப்படை வீரர்களின் தன்னலமற்ற பங்களிப்புகளுக்கு அல்ட்ராவொய்லெட் மற்றும் எம்.ஆர்.சி வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதை மற்றும் நன்றியுணர்வை இந்த பேரணி வெளிக்காட்டுகிறது.
பல்வேறு நிலப்பரப்புகளை கடந்து செல்லும்போது, இந்த முயற்சி அவர்களின் தியாகங்கள் மற்றும் தேசத்திற்கான சேவைக்கு ஒரு மனமார்ந்த அஞ்சலியாக அமைகிறது. தட்சிண் பாரத் பகுதியின் கீழ் நடத்தப்பட்ட இந்த பேரணி ஆனது திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் கோயம்புத்தூர் என தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயணத்தில், சுமார் 6 ஆயிரம் கிமீ தொலைவை அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகளில் சுமார் 3,000 முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர் நாரிகள் கடந்தனர். இந்த பயணத்தின் போது மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்ததோடு, மக்களுக்கான உரிமைகள் குறித்த முக்கியமான தகவல்களையும் இராணுவ வீரர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.
அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக்கான இதில் 0-இல் இருந்து 60km/h வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கில் 10.3kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 30 கிலோவாட்ஸ் (40.2 எச்பி) வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகள் இந்திய கண்டுப்பிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளின் அடையாளமாக விளங்குகின்றன. மேலும், இந்த பயணத்தின் மூலமாக, எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் செயல்படுதிறனையும் நம்மால் அறிய முடிகிறது. மற்றும், எஃப்77 பைக்கின் திறனை தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் உள்ளவர்கள் அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








