பெயர் மட்டும்தான் இந்தியன்... ஆனா பக்கா அமெரிக்கன் பைக் கம்பெனி! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே இதற்கு பரவாயில்லை!

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), பெயர் மட்டும்தான் இந்தியா, ஆனால் இது அமெரிக்க பைக் நிறுவனம் ஆகும். எவ்வாறு இந்த நிறுவனத்துக்கு 'இந்தியன்' என்கிற பெயர் வந்தது என்பது எல்லாம் தனி கதை. ஐரோப்பாவில் தோன்றிய மோட்டார்சைக்கிள்களை முதன்முதலில் அமெரிக்காவில் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தவர்கள் வைத்த பெயர் தான், இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆகும். அமெரிக்காவில் பைக்குகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவிலும் அதன் சில பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் தற்போது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்தியன் பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலைகள் எவ்வளவு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் என பெயரை பார்த்தவுடன், இந்திய சந்தைக்கு ஏற்ற விலை குறைவான பைக்குகளை இந்த அமெரிக்க பைக் நிறுவனம் உற்பத்தி செய்கிறது என நினைத்துவிட வேண்டாம். ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) பைக்குகளுக்கு இணையாக பல லட்ச ரூபாய் விலைகளில் இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

indian motorcycles in india

அதற்கேற்ப, இந்த பைக்குகள் மிகவும் பவர்ஃபுல்லானவைகளாகவும், அசத்தலான தோற்றம் கொண்டவைகளாகவும் விளங்குகின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ள பைக்குகளில் சீஃப் (Chief), சீஃப்டெயின் (Chieftain), சேலஞ்சர் (Challenger), ஸ்பிரிங்ஃபீல்ட் (Springfield), பர்சூட் (Pursuit) மற்றும் ரோட்மாஸ்டர் (Roadmaster) என்கிற உலகளவில் பிரபலமான இந்தியன் பைக்குகள் உள்ளன.

இதில் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டு இருப்பது என்றால், அது இந்தியன் சீஃப் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.23.52 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, இதுதான் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தியன் பைக்கின் விலை ஆகும். மொத்தம் ஆறு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் இந்தியன் சீஃப் பைக்கில் 1,890சிசி, வி-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

indian motorcycles in india

இதற்கடுத்து விலை குறைவான இந்தியன் பைக் என்றால், அது சேலஞ்சர் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.36.12 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் சேலஞ்சர் பைக்கில் 1,768சிசி லிக்யுடு-கூல்டு வி-ட்வின் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே, சேலஞ்சர் பைக்கின் டார்க் ஹார்ஸ் வெர்சனில் 1,834சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதற்கடுத்து குறைந்த விலையில் சீஃப்டெயின் ரூ.37.11 லட்சத்தில் இருந்து கிடைக்கும். பழமையான தோற்றம் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களுக்கு சீஃப்டெயின் ஏற்றதாக இருக்கும். நான்கு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கிலும் இந்தியன் சீஃப் பைக்கில் பொருத்தப்படும் அதே 1,890சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதேநேரம் சில வேரியண்ட்களில் 1,834சிசி என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

indian motorcycles in india

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்ட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41.96 லட்சத்தில் இருந்தும், பர்சூட் பைக்கின் விலைகள் ரூ.43.19 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விலையுயர்ந்த இந்தியன் பைக்காக ரோட்மாஸ்டர் சுமார் ரூ.48.49 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இந்தியன் பைக்குகள் அனைத்திலும் நிறைய தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் என்ஜின் & கியர்பாக்‌ஸ் ஆப்ஷன்கள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு குறிப்பிடப்பட்டு இருப்பவை அனைத்தும் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இந்த அளவிற்கு பல இலட்ச ரூபாய் மதிப்பிலான இந்தியன் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏறக்குறைய ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்கை எத்தனை பேர் வாங்க போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 5:00 [IST]
English summary
Indian motorcycle announced 2025 heavyweight range bikes price in india
மேலும்... #indian motorcycle #bike price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X