இந்த அமெரிக்கன் பைக்குகளை வாங்குவதற்கு லோன் போட்டா மட்டும் பத்தாது! பெயர் மட்டும்தான் இந்தியன்...!
இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), பெயர் மட்டும்தான் இந்தியா உடையது; மற்றப்படி இது ஒரு பிரபலமான மற்றும் பழமையான அமெரிக்கன் மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்தியன் என பெயர் வைத்திருந்தாலும், இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் சற்று தாமதமாகவே நுழைந்த இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து தற்போது புதியதாக சில மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியன் ஸ்காட் (Scout) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்குகளில் மொத்தம் 8 ஸ்காட் பைக்குகள் அடங்குகின்றன. அவையாவன, ஸ்காட் சிக்ஸ்டி கிளாசிக், ஸ்காட் சிக்ஸ்டி பாப்பர், ஸ்போர்ட் ஸ்காட் சிக்ஸ்டி, 1010 ஸ்காட், ஸ்காட் கிளாசிக், ஸ்காட் பாப்பர், ஸ்போர்ட் ஸ்காட் மற்றும் விலையுயர்ந்த சூப்பர் ஸ்காட் என்பன ஆகும்.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.12.99 லட்சத்தில் துவங்குகின்றன. அதாவது, இந்த 8 ஸ்காட் பைக்குகளிலேயே விலை குறைவானதின் விலையே ரூ.12.99 லட்சம் ஆகும். அதுவும், இந்த ரூ.12.99 லட்சம் என்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.
இந்த அளவிற்கு விலைமிக்க இந்த இந்திய ஸ்காட் பைக்குகள் இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதாவது, மேலே குறிப்பிடப்பட்ட ஸ்காட் பைக்குகளில் முதல் மூன்று பைக்குகளில் 999சிசி என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக இது 85 பிஎச்பி மற்றும் 87 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

அதேநேரம், மற்ற விலைமிக்க ஸ்காட் பைக்குகளில் பவர்ஃபுல்லான 1,250சிசி லிக்யுடு-கூல்டு வி-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 108 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 'ஸ்பீடுபிளஸ்' (SpeedPlus) என அழைக்கப்படும் இந்த 1,250சிசி என்ஜினுக்கு பதிலாக முன்பு 1,133சிசி என்ஜின் வழங்கப்பட்டு வந்தது.
புதிய ஸ்பீடுபிளஸ் என்ஜின் வலிமையான லோ & மிட்-ரேஞ்ச் செயல்படுதிறனை வழங்கக் கூடியதாகவும், தற்போதைய உலகின் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ஜின் வேறுப்பட்டாலும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்காட் பைக்குகள் அனைத்திலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ஸ்காட் பைக்குகளுள் சிலவற்றில் ரைடு மோட்கள் (Riding Modes) மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) போன்ற அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அனைத்து ஸ்காட் பைக்குகளிலும் ஹேண்டில்பாருக்கு மத்தியில் சிறிய அளவிலான டிஜிட்டல் திரை உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் (Instrument Cluster) வழங்கப்பட்டுள்ளது.
அதுவே, விலையுயர்ந்த பைக்குகளில் இந்த திரை ஆனது டிஎஃப்டி டிஸ்பிளே (TFT Display) ஆக கனெக்டட் வசதிகள் உடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், விலைமிக்க ஸ்காட் பைக்குகளில் சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் (USB Charging) வசதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உருவாக்கும் பாப்பர் (Bobber) ஸ்டைலான பைக்கான ஸ்காட் விற்பனையில் ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley-Davidson Nightster), டிரையம்ப் பொன்னேவில்லே பாப்பர் (Triumph Bonneville Bobber) போன்ற மிடில்-வெயிட் பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது. புதிய இந்தியன் ஸ்காட் பைக்குகள் புதிய என்ஜின் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் பைக்குகள் அமெரிக்காவிலேயே சற்று அதிக விலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படியிருக்க, அங்கிருந்து கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் பைக்குகளின் விலைகளை இந்தியாவில் குறைவானதாக எதிர்பார்க்க முடியாது. தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ப நன்கு சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கக்கூடிய மற்றும் பவர்ஃபுல்லான பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தியன் ஸ்காட் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications