இப்படி எல்லாம் பைக் இருக்குறதே பலருக்கு தெரியாதே! வாங்கினால் ஏரியாவில் தனியா தெரிவீங்க!!
மோட்டார்சைக்கிள்கள் அவற்றின் உடலமைப்பை பொறுத்து பல விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. கேடிஎம் ட்யூக் (KTM Duke) பைக்குகள் எல்லாம் நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked Streetfighter) பைக்குகள் ஆகும். அதுவே, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) போன்றவை அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகள் ஆகும். இவை இல்லாமல், ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) என்கிற இன்னொரு ரகமும் உள்ளது. ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் பழைய பைக்குகளை போன்று ரெட்ரோ தோற்றத்தில், கொஞ்சம் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை ஆக உள்ளன. அதாவது, ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை கரடு,முரடான பாதைகளுக்கும் கொண்டு செல்லலாம்.
இவ்வாறான ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகள் இந்திய மார்க்கெட்டிற்கு சற்று புதியவை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், சமீப ஆண்டுகளில் வெவ்வேறான பிராண்ட்களில் இருந்து அதிகமாக வர ஆரம்பித்துள்ள ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளுள் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையில் உள்ள ஐந்து பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளன் 401 (Husqvarna Svartpilen 401): இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் 5 ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில் விலை அதிகமானது இதுவாகும். இதுக்கு முன்னர் ஸ்வார்ட்பிளன் 250 பைக் இந்தியாவில் விற்பனையில் இருந்தது. ஆனால் தற்போது ஸ்வார்ட்பிளன் 401 பைக் மட்டுமே ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்தில் ஹஸ்க்வர்னாவில் உள்ளது.

டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ்சி (Triumph Scrambler 400 XC): இதனை காட்டிலும் குறைந்த விலையில் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் உள்ளது என்றாலும், ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் போன்று இருப்பது டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ்சி ஆகும். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.94 லட்சமாக உள்ளது.

ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் (Honda CB350 RS): சிபி350 பைக்கின் ஸ்க்ராம்ப்ளர் வெர்சனாக சிபி350 ஆர்.எஸ் விற்பனையில் உள்ளது. அதற்கேற்ப, வழக்கமான சிபி350 பைக்கை காட்டிலும் சற்று அதிகமாக ரூ.2.15 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்டுள்ளது. ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்காக இருப்பினும், இதில் சற்று அளவில் பெரியதான சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler): கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் யெஸ்டி பிராண்டில் ஸ்க்ராம்ப்ளர் என்கிற பெயரிலேயே ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒன்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.12 லட்சமாக தற்சமயம் உள்ளது. நியோ-ரெட்ரோ டிசைனில் தோற்றத்தை கொண்டுள்ள யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 334சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 (Royal Enfield Scram 440): ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்தில் பைக் ஒன்றை உருவாக்கும் முயற்சியாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கை உருவாக்கியது என்பது இந்த பைக்கின் பெயரை பார்த்தாலே தெரியும். இது அடிப்படையில் ஓர் ஹிமாலயன் (Himalayan) அட்வென்ச்சர் பைக் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, இன்னும் சில ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றின் விலைகள் அதிகம் ஆகும். தினந்தோறும் பயன்படுத்துவதுடன், சில நேரங்களில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் பைக்கை கொண்டு செல்ல விரும்புபவர்கள் இந்த 5 பைக்குகளுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









