ஷோரூமுக்கு வரவங்க எல்லாருமே இந்த பைக்கை தான் கேட்குறாங்க! ஹீரோ கம்பெனிக்கு வருவாய் கொட்டுது!
உலகளவில் அதிக எண்ணிக்கையில் பைக்குகள் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், அதிக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகும் நாடுகளுள் முதன்மையானதாக இந்தியா உள்ளது. அந்த அளவிற்கு நம் நாட்டில் கார்களை காட்டிலும் 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கையே அதிகம். 2-வீலர்களில் குறிப்பாக, பைக்குகளுக்கு நம் நாட்டு மக்களிடையே எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. புது, புது ஸ்கூட்டர்கள் (Scooters) மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், கியர்களை மாற்றிக் கொண்டு பைக் ஓட்டவே நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம்.
இதன் காரணமாக, இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனை ஆகுகின்றன. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகள் மட்டும் 7 லட்சத்து 21 ஆயிரத்து 735 ஆகும். அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஏப்ரலில் இதே 10 பைக் மாடல்கள் சுமார் 9 லட்சத்து 17 ஆயிரத்து 790 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த டாப்-10 பைக்குகள் என்னென்ன? அவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வழக்கம்போல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட பைக்காக முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பிடித்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 893 ஆகும்.
அதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்து 959 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது 38.34% குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரத்து 66 ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டருக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் ஹோண்டா ஷைன் (Honda Shine) உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 908 ஆகும். ஸ்பிளெண்டரை போன்று இல்லாமல், 2024 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் 26,157 ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், 2024 ஏப்ரலில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 751 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 12 பைக்குகள் விற்பனை உடன் பஜாஜ் பல்சர் உள்ளது. அதுவே, 2024 ஏப்ரலில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 809 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்ததால், கடந்த ஏப்ரல் மாதத்தில் பல்சர் பைக்குகள் விற்பனை ஆனது 14.36% குறைந்துள்ளது.

பல்சரை போன்று மார்க்கெட்டில் பிரபலமான டிவிஎஸ் பைக்குகளான அப்பாச்சி (Apache) இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது. இருப்பினும், விற்பனை எண்ணிக்கையில் பல்சருக்கும், அப்பாசிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. கடந்த மாதத்தில் 45 ஆயிரத்து 633 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே டிவிஎஸ் ரைடர் மற்றும் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் உள்ளன.
இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 43,028 மற்றும் 41,645 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி நான்கு இடங்களை முறையே பஜாஜ் பிளாட்டினா (29,689), ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (26,801), ஹோண்டா யூனிகார்ன் (26,017) மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (18,109) பைக்குகள் பிடித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வருகிறது என்றாலும், விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கக்கூடிய பைக்குகளின் விற்பனை கணிசமாக குறைந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தேசிய பைக் என அழைக்கும் அளவிற்கு பிரபலமான ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், டிவிஎஸ் ரைடர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்ற லேட்டஸ்ட் பைக்குகளை இன்றைய கால மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்து இருப்பதாகும்.


Click it and Unblock the Notifications









