ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வாங்கும் இந்த ஹீரோ பைக்கை பற்றி தெரியுமா? ரோட்ல எந்த பக்கம் திரும்புனாலும் இருக்கு!

உலகிலேயே இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் விற்பனையாகுகின்றன. கடந்த மே மாதத்திலும் அதே நிலை தான் தொடர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட முதல் 10 2-வீலர்கள் மட்டுமே சுமார் கிட்டத்தட்ட 12 இலட்சம் வாகனங்கள் ஆகும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 10 இடங்களில் உள்ள 2-வீலர்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மட்டும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 386 ஆகும். வழக்கத்தை காட்டிலும் இது அதிகமா? அல்லது குறைவா? என்பதை பற்றிய விரிவான விபரங்களையும், அந்த டாப்-10 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள டாப்-10 2-வீலர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு இதே மே மாதத்தில் மொத்தம் 11 லட்சத்து 41 ஆயிரத்து 891 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த 10 2-வீலர் மாடல்கள் 42 ஆயிரத்து 495 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

india s most selling two-wheelers

இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 10வது இடத்தில் இருப்பது டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) பைக் ஆகும். 125சிசி என்ஜின் உடன் ஸ்போர்டியான தோற்றம் கொண்ட பைக்கை வாங்க விரும்புவோருக்கு ஏற்ற பைக்காக விளங்கும் இது கடந்த 2024 மே மாதத்தில் 37 ஆயிரத்து 401 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் சற்று குறைவாக 35 ஆயிரத்து 401 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனை விட சில ஆயிரங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் மோட்டாரின் மற்றொரு பிரபலமான பைக்கான எக்ஸ்.எல் 37 ஆயிரத்து 264 யூனிட்கள் விற்பனை உடன் 9வது இடத்தில் உள்ளது. 10வது மற்றும் 9வது இடங்களில் மட்டுமில்லை, 8வது மற்றும் 6வது இடங்களிலும் டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர்கள் தான் உள்ளன.

india s most selling two-wheelers

இவ்வாறு, முதல் 10 2-வீலர்களில் நான்கு 2-வீலர்கள் டிவிஎஸ் நிறுவனத்துடையதாக உள்ளன. ஆனால், கடைசி 5 இடங்களில்தான் இந்த 4 டிவிஎஸ் 2-வீலர் மாடல்களும் உள்ளன. 8வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி 49 ஆயிரத்து 99 பைக்குகள் விற்பனை உடனும், 6வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 97 ஆயிரத்து 606 ஸ்கூட்டர்கள் விற்பனை உடனும் உள்ளன.

இவை இரண்டின் விற்பனையும் 2024 மே மாதத்தை காட்டிலும் 29% மற்றும் 28% அதிகரித்துள்ளது. இவை இரண்டிற்கும் மத்தியில் சுஸுகி ஆக்ஸஸ் 7வது இடத்தில் உள்ளது. கடந்த மே மாதத்தில் 75 ஆயிரத்து 778 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 மே மாதத்தில் 64 ஆயிரத்து 812 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

india s most selling two-wheelers

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக் கடந்த மாதத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 1 லட்சத்து 7 ஆயிரத்து 768 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 மே மாதத்தில் 87 ஆயிரத்து 143 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

4வது இடத்தில் பஜாஜ் பல்சர் 1 லட்சத்து 22 ஆயிரத்து 151 பைக்குகள் விற்பனை உடன் இருக்க, 2024 மே மாதத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 480 பல்சர் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் 3வது மற்றும் 2வது இடங்களில் ஹோண்டா ஷைன் மற்றும் ஹோண்டா ஆக்டிவா முறையே 1,58,271 மற்றும் 1,90,713 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்து இந்தியர்கள் அதிகமாக வாங்கும் 2-வீலராக வழக்கம்போல் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) உள்ளது.

india s most selling two-wheelers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்து 335 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. 2வது இடத்தில் உள்ள ஆக்டிவாவிற்கும், ஸ்பிளெண்டருக்கும் எந்த அளவிற்கு வித்தியாசம் உள்ளது என்பதை பாருங்கள். இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை அதிகரித்துக் கொண்டே போவதாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 20, 2025, 10:19 [IST]
English summary
Indias most selling two wheelers may 2025 check all details here
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X