ஜிஎஸ்டி குறைச்சதுனால தான் இது சாத்தியமாச்சு... டிவிஎஸ் கம்பெனிக்கு மட்டும்தான் ஒரேயொரு வருத்தம்!

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பைக்குகளின் விலையிலும், விற்பனையிலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 இருசக்கர வாகனங்களை பார்த்த நிலையில், அதனை தொடர்ந்து அவற்றுள் ஸ்கூட்டர்களை மட்டும் தனியாக எடுத்து பார்த்திருந்தோம்.

இந்த நிலையில், தற்போது டாப்-10 மோட்டார்சைக்கிள்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த செப்டம்பர் 22 அன்று நடைமுறைக்கு வந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்புகள், சந்தையில் சில சுவாரஸ்யமான முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளன. குறிப்பாக, 350சிசிக்கு குறைவான மோட்டார்சைக்கிள்களுக்கான வரி 28%-இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டது.

india s most sold bikes in september 2025

இதன் விளைவாக, கடந்த மாத டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மோட்டார்சைக்கிள்களின் மொத்த விற்பனை 11,01,572 யூனிட்டுகளாகும். இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 10,29,613 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில், 6.99% வளர்ச்சி விகிதத்தை காட்டுகிறது. மேலும், 2025 ஆகஸ்ட்டில் 8,82,349 யூனிட்டுகளாக இருந்த விற்பனையும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

டாப் 10 மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) வழக்கம்போல முன்னிலை வகிக்கிறது. பல ஆண்டுகளாக இந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஸ்பிளெண்டர், அதன் நம்பகமான எஞ்சின் மற்றும் சிறந்த மைலேஜிற்காக புகழ்பெற்றது. கடந்த மாதம் 3,82,383 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகி, மொத்த பைக்குகள் விற்பனையில் 34.71% சந்தை பங்கை பெற்றுள்ளது.

india s most sold bikes in september 2025

அதாவது, கடந்த மாதத்தில் பைக் வாங்கியவர்களில் 3இல் ஒருவரது தேர்வு நிச்சயமாக ஸ்பிளெண்டர் ஆக உள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் 3,75,886 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்கப்பட்ட இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் விற்பனை 1.73% வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஷைன் 1,85,059 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது.

இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 1,81,835 யூனிட்களை விட 1.77% அதிகம் மற்றும் மொத்த பைக்குகள் விற்பனையில் 16.80% பங்கையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பஜாஜ் பல்சர் 1,55,798 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரில் 1,39,128 யூனிட்களாக இருந்த விற்பனையை விட 11.98% வலுவான ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

india s most sold bikes in september 2025

பஜாஜ் பல்சர் என்.எஸ்125 (2026 மாடல்) புதிய வண்ணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், அவை வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது இடத்தில் எச்.எஃப் டீலக்ஸ் 1,18,043 யூனிட்களுடன், 2024 செப்டம்பரின் 1,13,827 யூனிட்களாக இருந்த விற்பனையை விட 3.70% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்த லிஸ்ட்டில் இதற்கடுத்துள்ள பைக்குகள் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அந்த வகையில், பஜாஜ் பிளாட்டினா கடந்த மாதம் 62,260 யூனிட்களுடன் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. இது 49,774 யூனிட்களாக இருந்த முந்தைய ஆண்டை விட 25.09% உயர்வு மற்றும் 12,486 யூனிட்கள் கூடுதல் விற்பனையைக் குறிக்கிறது.

india s most sold bikes in september 2025

டிவிஎஸ் அப்பாச்சி 53,326 யூனிட்கள் விற்பனையுடன், 41,640 யூனிட்கள் விற்பனையான முந்தைய ஆண்டை விட 28.06% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்து நேர்மறையான முடிவை எட்டியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு மாடலான ரைடர், கடந்த மாதம் 41,753 யூனிட்கள் விற்பனையானது. எனினும், இந்த பட்டியலில் 2024 செப்டம்பரை விட விற்பனை குறைந்த ஒரே ஒரு பைக் இது ஆகும்.

2024 செப்டம்பரில் 43,274 ரைடர் பைக்குகள் விற்கப்பட்டு இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் விற்பனை 3.51% குறைந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய ரைடர் 125 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது புதிய பிரீமியம் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறனுடன் வந்துள்ளதால், அடுத்த மாதங்களில் ரைடர் பைக்குகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

india s most sold bikes in september 2025

எட்டாவது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, 40,449 யூனிட்கள் விற்பனையுடன் 22.33% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, 9வது இடத்தில் ஹோண்டா சிபி யூனிகார்ன் 32,361 யூனிட்கள் விற்பனையுடனும், பத்தாவது இடத்தில் இருந்தாலும் அதிகபட்ச ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஹீரோ கிளாமர் 30,140 யூனிட்கள் விற்பனையுடனும் உள்ளன.

No Top 10 Motorcycles Sep-25 Sep-24 Diff Growth % YoY % Share Sep 25
1 Splendor 3,82,383 3,75,886 6,497 1.73 34.71
2 Shine 1,85,059 1,81,835 3,224 1.77 16.80
3 Pulsar 1,55,798 1,39,128 16,670 11.98 14.14
4 HF Deluxe 1,18,043 1,13,827 4,216 3.70 10.72
5 Platina 62,260 49,774 12,486 25.09 5.65
6 Apache 53,326 41,640 11,686 28.06 4.84
7 Raider 41,753 43,274 -1,521 -3.51 3.79
8 Classic 350 40,449 33,065 7,384 22.33 3.67
9 CB Unicorn 32,361 31,353 1,008 3.22 2.94
10 Glamour 30,140 19,831 10,309 51.98 2.74
- Total 11,01,572 10,29,613 71,959 6.99 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி 2.0 திருத்தம் வாகனங்களை மலிவான விலையில் பெற உதவியதுடன், பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வாங்குபவர்களின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இதுதான், கடந்த செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான பைக்குகளின் விற்பனையை உயர்த்தியுள்ளது என சொன்னால் அது மிகையில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 11:53 [IST]
English summary
Indias most sold bikes in september 2025 hero splendor honda shine and bajaj pulsar
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X