ஹோண்டாவால் எவ்வளவு முக்குனாலும் ஹீரோவை முந்த முடியல! ஹீரோ-ஹோண்டா கம்பெனியா இருந்தப்ப எப்படி இருந்தாங்க!!

உலகளவில் இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியா ஒன்று என சொன்னால் அது மிகை இல்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் பல லட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. நம் நாட்டு மார்க்கெட்டில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை உள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு தேவை அதிகரித்த பிறகு பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. ஆதலால், அவை அனைத்தை பற்றியும் ஒரே தொகுப்பில் பார்ப்பது முடியாத காரியம். எனவே, இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள 6 இருசக்கர வாகன நிறுவனங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்த 6 நிறுவனங்களில் இருந்து மட்டுமே கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 14 லட்சத்து 95 ஆயிரத்து 168 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மற்ற 2-வீலர் நிறுவனங்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துவிடும்.

most two wheeler selling brands

இருப்பினும், கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 48 ஆயிரத்து 989 இருசக்கர வாகனங்கள் அதிகமாக 15 லட்சத்து 44 ஆயிரத்து 157 இருசக்கர வாகனங்கள் இதே 6 நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2025 மே மாதத்தில் இதனை காட்டிலும் அதிகமாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 552 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

வழக்கம்போல், கடந்த 2025 ஜூன் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) முதலிடத்தை பிடித்துள்ளது. வழக்கமாக ஹீரோவுக்கும், ஹோண்டாவுக்கும் தான் விற்பனையில் பலத்த போட்டி இருக்கும். ஆனால், கடந்த மாத விற்பனையில் ஹோண்டாவை பெரிய வித்தியாசத்துடன் ஹீரோ முந்தியுள்ளது.

most two wheeler selling brands

ஹீரோவில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 136 ஆகும். 2வது இடத்தில் உள்ள ஹோண்டா விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 812 மட்டுமே ஆகும். ஆனால், 2024 ஜூனில் இதனை காட்டிலும் சுமார் 96 ஆயிரம் 2-வீலர்கள் அதிகமாக 4 லட்சத்து 82 ஆயிரத்து 597 2-வீலர்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

ஹீரோ இதனை காட்டிலும் வெறும் 9 ஆயிரம் 2-வீலர்கள் அதிகமாக 2024 ஜூனில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 416 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இவற்றிற்கு அடுத்து, 3வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 12 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் உள்ளது.

most two wheeler selling brands

ஆனால், கடந்த மே மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருந்தது. 2024 ஜூனில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 734 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வரிசையில் 4வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) உள்ளது. பஜாஜில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 317 ஆகும்.

ஆனால், கடந்த மே மாதத்தில் பஜாஜ் 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி இருந்தது. இதற்கடுத்து 5வது இடத்தில் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ராயல் என்ஃபீடு (Royal Enfield) நிறுவனம் 76 ஆயிரத்து 957 பைக்குகள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, வழக்கமாக இந்த 5வது இடத்தை பிடிக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) 73 ஆயிரத்து 934 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் 6வது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். பஜாஜ், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான 2-வீலர்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஆகையால் அவற்றையும் கணக்கில் சேர்த்தால், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு இணையாக டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் வந்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 5:00 [IST]
English summary
Indias most two wheeler selling brands hero motocorp to suzuki motorcycle
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X