மத்திய அரசு செய்த சின்ன மாற்றம்... இந்தியாவில் 2-வீலர் சேல்ஸ் விண்ணை முட்டுது!

இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தை, 2025 அக்டோபரில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள் சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 27 லட்சத்து 75 ஆயிரத்து 578 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 51.76% அதிகரிப்பாகும்.

பண்டிகைக் காலம் மற்றும் ஜி.எஸ்.டி (GST) மாற்றங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. முந்தைய மாதமான செப்டம்பரில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், அக்டோபரில் விற்பனை 144.60% உயர்ந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 787 இருசக்கர வாகனங்களுடன் சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

two wheeler sales 2025 october month report

இது மொத்த சந்தையில் 31.58% ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 678 ஹீரோ இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்த நிலையில், ஹீரோவின் விற்பனை 72.2% உயர்ந்துள்ளது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 976 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில் HMSI விற்ற 5 லட்சத்து 56 ஆயிரத்து 209 இருசக்கர வாகனங்களை விட 47.78% அதிகமாகும். டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனி 5 லட்சத்து 58 ஆயிரத்து 75 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இது 57.82% வளர்ச்சி ஆகும்.

two wheeler sales 2025 october month report

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 713 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 அக்டோபரில் பஜாஜ் விற்ற 2 லட்சத்து 31 ஆயிரத்து 48 இருசக்கர வாகனங்களை விட 40.11% அதிகமாகும். இருப்பினும், பஜாஜின் சந்தைப் பங்கு 11.13%-ல் இருந்து 10.28% ஆகக் குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 615 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 அக்டோபரை விட 47.32% வளர்ச்சி ஆகும். சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் 2025 அக்டோபரில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 715 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

two wheeler sales 2025 october month report

அதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 107 இருசக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி விற்றிருந்தது. பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி மாற்றங்களால் பயணிகளுக்கான இருசக்கர வாகனங்கள் தேவை அதிகரித்துள்ளதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில், ஏத்தர் எனர்ஜி (Ather Energy) 92 ஆயிரத்து 359 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் இதற்கடுத்த நிலையில் உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மட்டும் 2025 அக்டோபரில் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 41 ஆயிரத்து 843 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாக இருந்த ஓலா விற்பனை, இந்த ஆண்டு 16 ஆயிரத்து 36 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் 2025 வரை, இந்தியாவின் மொத்த இருசக்கர வாகன சில்லறை விற்பனை 1 கோடியே 19 லட்சத்து 94 ஆயிரத்து 390 யூனிட்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.63% அதிகம்.

two wheeler sales 2025 october month report
No 2W Retail Sales Oct-25 Oct-24 Diff Growth % YoY Share % Oct 25
1 Hero 9,94,787 5,77,678 4,17,109 72.20 72.42
2 Honda 8,21,976 5,56,209 2,65,767 47.78 59.84
3 TVS 5,58,075 3,53,619 2,04,456 57.82 40.63
4 Bajaj 3,23,713 2,31,048 92,665 40.11 23.57
5 Royal Enfield 1,44,615 98,163 46,452 47.32 10.53
6 Suzuki 1,35,715 1,07,107 28,608 26.71 9.88
7 Yamaha 92,359 68,461 23,898 34.91 6.72
8 Ather 28,101 16,248 11,853 72.95 2.05
9 Ola 16,036 41,843 -25,807 -61.68 1.17
10 Greaves - Ampere 7,629 3,990 3,639 91.20 0.56
11 Jawa/Yezdi / BSA 6,922 4,329 2,593 59.90 0.50
12 Piaggio 3,666 3,296 370 11.23 0.27
13 Others 16,252 13,587 2,665 19.61 1.18
- Total 31,49,846 20,75,578 10,74,268 51.76 229.30

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 அக்டோபரில் ஏற்பட்ட இந்த அதிரடி வளர்ச்சிக்கு, பண்டிகைக் கால தேவை, கிராமப்புறங்களில் மேம்பட்ட வாகனம் வாங்கும் உணர்வு மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் கடந்த 2025 அக்டோபர் ஒரு வலுவான விற்பனை மாதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் தகவல்களுக்கு டிரைவ்ஸ்பார்க் இணையதளத்துடன் இணைப்பில் இருக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 8, 2025, 16:51 [IST]
English summary
Indias most two wheeler selling brands last 2025 october month sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X