ஜிஎஸ்டி குறைக்கலனா இது நடந்திருக்காது... பைக் ஷோரூம்கள் ஒவ்வொன்றிலும் கூட்டம் அள்ளுவதற்கு இதுதான் காரணம்!

2025 செப்டம்பரில் இந்தியாவின் இருசக்கர வாகன சில்லறை விற்பனை 12,87,735 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது 2024 செப்டம்பரில் பதிவான 12,09,072 யூனிட்டுகளை விட 6.51% அதிகம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் 2-வீலர் விற்பனை 6.26% குறைந்தாலும், பண்டிகை கால தேவை மற்றும் குறைக்கப்பட்ட விலைகள் காரணமாக, இந்த ஆண்டின் ஒட்டுமொத்த இந்திய 2-வீலர்கள் விற்பனை 3.07% வளர்ச்சி கண்டுள்ளது.

செப்டம்பர் மாத விற்பனை பட்டியலில் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், வழக்கம்போல் ஹோண்டா (Honda) இரண்டாம் இடமும், டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3,23,268 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

india s top two wheelers brands

இது 2024 செப்டம்பரில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்த 2,71,820 இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் 18.9% அதிகமாகும். ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் 3,22,614 யூனிட்டுகளை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 3,34,860 ஹோண்டா 2-வீலர்களை காட்டிலும் 3.7% குறைவாகும்.

இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த மாதம் 2,46,064 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிவிஎஸ் விற்பனை செய்த 2,22,029 2-வீலர்களை விட 10.8% அதிகமாகும். 4வது இடத்தை பிடித்துள்ள பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) 1,37,224 2-வீலர்கள் விற்பனையை கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்துள்ளது.

india s top two wheelers brands

இது, 2024 செப்டம்பரில் பஜாஜ் விற்பனை செய்த 1,42,002 2-வீலர்களில் இருந்து 3.4% குறைந்துள்ளது. ராயல் என்பீல்டு (Royal Enfield) கடந்த செப்டம்பர் மாதத்தில் 77,462 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் 2024 செப்டம்பர் மாதத்தின் 58,653 2-வீலர்களை காட்டிலும் 32.1% அதிகமாகும்.

இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தை பிடித்துள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles) கடந்த மாதத்தில் 77,342 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 74,699 2-வீலர்களை விட 3.5% அதிகமாகும். இதற்கடுத்து 7வது இடத்தை பிடித்துள்ள யமஹா (Yamaha) 48,099 2-வீலர்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

india s top two wheelers brands

இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 50,265 யமஹா 2-வீலர்களை விட 4.3% குறைவாகும். கடந்த மாத எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரையில், முதலிடத்தை பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தை பிடித்துள்ளது. ஏத்தர் எனர்ஜியில் இருந்து கடந்த மாதத்தில் 18,141 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இது 2024 செப்டம்பரில் ஏத்தர் விற்பனை செய்த 12,925 எலெக்ட்ரிக் 2-வீலர்களை காட்டிலும் 40.3% அதிகம் ஆகும். வழக்கமாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக முன்னிலை வகிக்கும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் 13,383 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

india s top two wheelers brands

இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 24,754 ஓலா 2-வீலர்களை காட்டிலும் 45.9% சரிவாகும். இதற்கடுத்து, கிரீவ்ஸ் காட்டன் 4,271 2-வீலர்களையும், கிளாசிக் லெஜண்ட்ஸ் 2,901 2-வீலர்களையும், பிஜிஅயூஸ் 2,271 2-வீலர்களையும் விற்பனை செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவை முறையே 2024 செப்டம்பரை விட 8.1%, 5.1% மற்றும் 10.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Company Sales Sep '25 Share Sep '25 (%) Sales Sep '24 Share Sep '24 (%)
HERO MOTOCORP LTD 3,23,268 25.10% 2,71,820 22.48%
HONDA MOTORCYCLE AND SCOOTER INDIA (P) LTD 3,22,614 25.05% 3,34,860 27.70%
TVS MOTOR COMPANY LTD 2,46,064 19.11% 2,22,029 18.36%
BAJAJ AUTO GROUP 1,37,224 10.66% 1,42,002 11.75%
ROYAL-ENFIELD (UNIT OF EICHER LTD) 77,462 6.02% 58,653 4.85%
SUZUKI MOTORCYCLE INDIA PVT LTD 77,342 6.01% 74,699 6.18%
INDIA YAMAHA MOTOR PVT LTD 48,099 3.74% 50,265 4.16%
ATHER ENERGY LTD 18,141 1.41% 12,925 1.07%
OLA ELECTRIC TECHNOLOGIES PVT LTD 13,383 1.04% 24,754 2.05%
GREAVES ELECTRIC MOBILITY PVT LTD 4,271 0.33% 2,779 0.23%
CLASSIC LEGENDS PVT LTD 2,901 0.23% 2,178 0.18%
PIAGGIO VEHICLES PVT LTD 2,530 0.20% 2,624 0.22%
BGAUSS AUTO PRIVATE LIMITED 2,271 0.18% 1,237 0.10%
PUR ENERGY PVT LTD 1,762 0.14% 277 0.02%
RIVER MOBILITY PVT LTD 1,688 0.13% 302 0.02%
Others Including EV 8,715 0.68% 7,592 0.63%
Total 12,87,735 100% 12,08,996 100%

Source: FADA

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை கால சலுகைகள் (Festival Offers) மற்றும் ஜிஎஸ்டி (GST) மாற்றத்தால் 350சிசி-க்கு குறைவான இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டதால், இந்தியாவின் இருசக்கர வாகன விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 2024 செப்டம்பரை காட்டிலும் வளர்ச்சியைப் கண்டுள்ளது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 13, 2025, 22:34 [IST]
English summary
Indias most two wheelers sold brands of september 2025 hero motocorp as usual top on list
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X