ஹீரோ-ஹோண்டா ஒண்ணா இருந்திருந்தா கதையே வேற... 2-வீலர் சேல்ஸில் ஹீரோவை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட ஹோண்டா!

முந்தைய கட்டுரை ஒன்றில் இந்தியாவில் சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் பார்த்த நிலையில், இந்த தொகுப்பில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கையை பார்ப்போம். 2025 அக்டோபரில் இந்திய இருசக்கர வாகன சந்தை, பண்டிகைக் கால தேவை மற்றும் கிராமப்புற மக்களின் மேம்பட்ட உணர்வு ஆகியவற்றால் மிதமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த முதல் ஆறு உற்பத்தி நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கை மொத்தமாக 25 லட்சத்து 8 ஆயிரத்து 82 இருசக்கர வாகனங்களாக பதிவாகி உள்ளது. இது 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 4.51% வளர்ச்சியையும், 2025 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 2.04% வளர்ச்சியையும் காட்டுகிறது. உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கிட்டு பார்த்தால், கடந்த மாதத்தில் இந்தியாவில் மட்டும் 21 லட்சத்து 12 ஆயிரத்து 180 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

most two-wheelers selling brands

இது 2024 அக்டோபரை காட்டிலும் 2.35% அதிகரிப்பு ஆகும். கடந்த அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் உள்நாட்டு மற்றும் மொத்த விற்பனை என இரண்டிலும் சரிவைக் கண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் 2024 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் 8% சரிவைச் சந்தித்து இருந்தாலும், 6 லட்சத்து 4 ஆயிரத்து 829 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் 28.6% சந்தைப் பங்கைக் கொண்டு முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனம் 5 லட்சத்து 98 ஆயிரத்து 952 இருசக்கர வாகனங்களுடன், 2024 அக்டோபரை விட 8.29% வளர்ச்சியுடன் ஹீரோவை நெருக்கமாகப் பின்தொடர்கிறது.

most two-wheelers selling brands

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 6 ஆயிரம் இருசக்கர வாகனங்களாகக் குறைந்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தனது ரைடர், ஜூபிட்டர் மற்றும் அப்பாச்சி பைக்குகளின் வலுவான தேவை காரணமாக 4 லட்சத்து 21 ஆயிரத்து 631 இருசக்கர வாகனங்களுடன் 2024 அக்டோபரை விடவும் 7.98% வளர்ச்சி கண்டு, மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ள பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் பல்சர் மற்றும் பிளாட்டினா பைக்குகளின் சிறப்பான விற்பனையால் 2 லட்சத்து 66 ஆயிரத்து 470 இருசக்கர வாகனங்களுடன் 4.13% நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் 350சிசி பைக்குகளுக்கான சிறப்பான வரவேற்பால் 1 லட்சத்து 16 ஆயிரத்து 844 இருசக்கர வாகனங்களை விற்று, 2024 அக்டோபரை காட்டிலும் 14.68% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

most two-wheelers selling brands

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 454 இருசக்கர வாகனங்களை விற்று 2024 அக்டோபரை விட 1.42% சரிவைக் கண்டு இந்த லிஸ்ட்டில் கடைசி 6வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், 2025 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையிலும் சுஸுகியின் உள்நாட்டு விற்பனை 2.30% சரிவை கண்டுள்ளது.

2 Wheeler Domestic Growth % YoY

No 2 Wheeler Domestic Oct-25 Oct-24 Diff Growth % YoY Share % Oct 25
1 Hero 6,04,829 6,57,403 -52,574 -8.00 28.64
2 Honda 5,98,952 5,53,120 45,832 8.29 28.36
3 TVS 4,21,631 3,90,489 31,142 7.98 19.96
4 Bajaj 2,66,470 2,55,909 10,561 4.13 12.62
5 Enfield 1,16,844 1,01,886 14,958 14.68 5.53
6 Suzuki 1,03,454 1,04,940 -1,486 -1.42 4.90
- Total 21,12,180 20,63,747 48,433 2.35 100.00

2 Wheeler Domestic Growth % MoM

No 2 Wheeler Domestic Oct-25 Sep-25 Diff Growth % MoM Share % Sep 25
1 Hero 6,04,829 6,47,582 -42,753 -6.60 31.45
2 Honda 5,98,952 5,05,693 93,259 18.44 24.56
3 TVS 4,21,631 4,13,279 8,352 2.02 20.07
4 Bajaj 2,66,470 2,73,188 -6,718 -2.46 13.27
5 Enfield 1,16,844 1,13,573 3,271 2.88 5.52
6 Suzuki 1,03,454 1,05,886 -2,432 -2.30 5.14
- Total 21,12,180 20,59,201 52,979 2.57 100.00

2 Wheeler Exports Growth % YoY

No 2 Wheeler Exports Oct-25 Oct-24 Diff Growth % YoY Share % Oct 25
1 Bajaj 1,75,846 1,58,463 17,383 10.97 44.42
2 TVS 1,03,519 87,670 15,849 18.08 26.15
3 Honda 51,644 44,591 7,053 15.82 13.04
4 Hero 30,979 21,688 9,291 42.84 7.82
5 Suzuki 25,807 15,115 10,692 70.74 6.52
6 Enfield 8,107 8,688 -581 -6.69 2.05
- Total 3,95,902 3,36,215 59,687 17.75 100.00

2 Wheeler Exports Growth % MoM

No 2 Wheeler Exports Oct-25 Sep-25 Diff Growth % MoM Share % Sep 25
1 Bajaj 1,75,846 1,57,665 18,181 11.53 39.53
2 TVS 1,03,519 1,10,644 -7,125 -6.44 27.74
3 Honda 51,644 62,471 -10,827 -17.33 15.66
4 Hero 30,979 39,638 -8,659 -21.85 9.94
5 Suzuki 25,807 17,664 8,143 46.10 4.43
6 Enfield 8,107 10,755 -2,648 -24.62 2.70
- Total 3,95,902 3,98,837 -2,935 -0.74 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் மற்றும் பண்டிகை கால தேவையால் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதை ஏற்கனவே பார்த்து இருந்தோம். சில்லறை விற்பனையை போன்று, இந்தியாவில் மொத்த 2-வீலர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளதை இந்த தொகுப்பின் மூலம் அறிய முடிகிறது. மொத்த விற்பனையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் 2-வீலர்களுடன் சேர்த்து, நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் 2-வீலர்களின் எண்ணிக்கையும் அடங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 9, 2025, 22:52 [IST]
English summary
Indias top most two wheelers selling brands as per october 2025 sales report
மேலும்... #bike sales #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X