ஏழைகளுக்கு பணத்தை பரிசா தரும் ஹர்ஷா சாய்க்கு இப்படி ஒரு பரிசா! பெட்டில இருந்தது ஒரு வாகனமா! அதோட விலை இவ்ளோவா!
ஹர்ஷா சாய், இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. இன்ஸ்டாகிராம், யுட்யூப் என சமூக வலைதளங்களில் மிகவும் அறியப்படக் கூடிய ஓர் நபர் இவர் ஆவார். இவர் பிறந்தது தெலங்கானா மாநிலத்திலாக இருந்தாலும் இப்போது இவர் நாடு முழுவதும் மிகவும் அறியப்படக் கூடியவர்களில் ஒருவராக உள்ளார். ஓர் பிளாக்பஸ்டர் ஹீரோவுக்கு இருப்பதை போல மிகப் பெரிய ரசிக பட்டாளம் அவருக்கு உண்டு. அனைத்தும் தானாக சேர்ந்த கூட்டம் என்று கூறலாம். ஏனெனில் அவர் மிகப் பெரிய நடகர்கூட இல்லை.
ஒரு சில படங்களிலேயே அவர் நடித்திருக்கின்றார். அதுவும் மிகவும் சிறிய சிறிய ரோல்களே ஆகும். இருப்பினும், இன்ஸ்டாகிராமில் 13.7 மில்லியன் பின்தொடர்பவர்களையும், யுட்யூபில் 10.9 மில்லியன் சஸ்ப்கிரைபர்களையும் ஹர்ஷா சாய் வைத்திருக்கின்றார். பணத்தையும், பரிசுகளையும் இல்லாதப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவதில் இவர் வள்ளல்.

பணத்தை கிள்ளி அல்ல கட்டுக் கட்டாக ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்து வருகின்றார். இதனாலேயே இவர் இந்திய அளவில் மிகவும் அறியப்படக் கூடிய நபராக உள்ளார். இத்தகைய நபருக்கே விலை உயர்ந்த பைக்கை ஒருவர் பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான பைக் மாடல்களில் ஒன்றான ஸ்ட்ரீட் டிரிபிள் 765 (Street Triple 765) பைக் மாடலே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 11.81 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 14 லட்சத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தகைய காஸ்ட்லியான பைக்கை ஓர் நண்பரே ஹர்ஷா சாய்க்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். அதீத ஆற்றல், மிகுந்த கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களை தாங்கியிருக்கும் ஓர் பைக் மாடலே ஸ்ட்ரீட் டிரிபிள் 765 பைக் மாடல் ஆகும்.
இந்த பைக் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர் (இது ஆரம்ப நிலை தேர்வு) மற்றும் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர்எஸ் (இது உயர்நிலை தேர்வு) ஆகும். இதில், உயர்நிலை தேர்வே ஹர்ஷா சாய்க்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில், சிறந்த ரைடு அனுபவத்திற்காக பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
அதில் ஒன்றாக சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கின்றது. பின் பக்கத்தில் ஓஹ்லின்ஸ் எஸ்டிஎக்ஸ்40 பிக்கி-பேக் ரிசர்வோய்ர் மோனோஷாக்கும், முன் பக்கத்தில் சோவா 41 மிமீ அப்சைடு டவுன் பிக் பிஸ்டன் ஃபோர்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீல் இரண்டு 310 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பன்முக ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், முன் பக்க வீல் கன்ட்ரோல், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், 5 அங்குல டிஎஃப்டி திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 765 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 12,000 ஆர்பிஎம்மில் 130 பிஎஸ் பவரையும், 9,500 ஆர்பிஎம்மில் 80 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த எஞ்சினும், இதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களே இந்த பைக்கை வழக்கமான சாலை பயன்பாடு மட்டுமல்லாமல் ரேஸ் டிராக்கிற்குமான பைக்காக பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கின்றது. இந்த பைக் லிட்டர் ஒன்றிற்கு 20 க்கும் குறைவான மைலேஜையே வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பைக்கையே இணையதள ஸ்டார் ஹர்ஷா சாய்க்கு அவருடைய நண்பர் பெட்டிக்குள் அடைத்து பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த பரிசளிப்பை பார்த்து தற்போது ஒட்டுமொத்த இணையதள உலகமும் மிரண்டு போயிருக்கின்றது என்றே கூறலாம். இத்தகைய நண்பர் நமக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசிப்பதற்கு பதிலாக நாமும் நம்முடை நண்பர்களுக்கு இதுபோன்று இல்லை என்றால் சிறிய பரிசையாவது அன்பளிப்பாக வழங்கி அவர்களை மகிழ்வியுங்கள் என்பதே எங்களின் எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








