பைக்கை பார்த்ததுமே புக் பண்ண கை துடிக்குது! இந்த விலை எல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம் ஆகிடுச்சு!

ஜாவா (Jawa) பைக்குகளை கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் 1970-80 சமயங்களில் எல்லாம் ஜாவா பைக்குகள் தான் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்தது. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டில் இருந்து ஜாவா சென்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் புதிய பைக்குகள் உடன் மார்க்கெட்டிற்கு வந்தது. கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு போட்டியாக ஜாவா பைக்குகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய ஆரம்பித்தது.

அதன்பின், மற்றொரு பழமையான பைக் நிறுவனமான யெஸ்டி (Yezdi)-ஐயும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மீண்டும் மார்க்கெட்டிற்கு கொண்டுவந்தது. அதன்பின், ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்ட்கள் இரண்டையும் இணைத்து 'ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ்' என்கிற பெயரில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

yezdi roadster mk2 launched

யெஸ்டி மீண்டும் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்ததும் ஒரே நேரத்தில் மூன்று பைக்குகளை அறிமுகம் செய்தது. மூன்றும் வெவ்வேறான உடலமைப்பை கொண்டவைகளாக இருந்தன. அவற்றுள் ஒன்று, யெஸ்டி ரோட்ஸ்டர் (Roadster) ஆகும். தாழ்வான உடலமைப்பை கொண்ட க்ரூஸர் (Cruiser) ரக பைக்காக யெஸ்டி ரோட்ஸ்டர் உள்ளது. இந்த நிலையில், இந்த பைக்கை அப்டேட் செய்து 'ரோட்ஸ்டர் எம்கே2' (Roadster MK2) என்கிற புதிய பெயரில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 969 என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரோட்ஸ்டர் எம்கே2 பைக் ஆனது முந்தைய ரோட்ஸ்டர் பைக்கை காட்டிலும் ரூ.800 குறைந்த விலையில் வந்துள்ளது. அதாவது, விலையில் பெரியதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

yezdi roadster mk2 launched

முந்தைய ரோட்ஸ்டர் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் பைக்கின் தோற்றம் சற்று மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன், என்ஜினின் செயல்படுதிறனும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர் ஆனது ரெட்ரோ டிசைனும், மாடர்ன் டிசைனும் இணைந்த கலவையிலான பைக் ஆகும். அது, புதிய ரோட்ஸ்டர் எம்கே2 பைக்கிலும் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் உடன் தொடர்ந்துள்ளது.

வட்ட வடிவில் ஹெட்லைட்டை முன்பக்கத்தில் கொண்டிருக்கும் புதிய ரோட்ஸ்டர் எம்கே2 பைக்கின் பின்பக்க இறுதிமுனை பகுதியின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், பைக்கின் பின்பக்கத்தில் மெல்லியதான எல்இடி இண்டிகேட்டர்கள் டெயில்லைட்கள் ஆகவும் செயல்படக் கூடியவைகளாக உள்ளன. ஆனால், இத்தகைய டெயில்லைட் & இண்டிகேட்டர் செட்-அப்பை பெற ரோட்ஸ்டர் எம்கே2 பைக்கின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்க வேண்டும்.

yezdi roadster mk2 launched

இந்த புதிய பைக்கை இரு விதமான ஹேண்டில்பார் ஆப்ஷன்களில் வாங்கும் விதத்தில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. ஒரேயொரு இருக்கையை கொண்ட இந்த பைக்கில் தேவைப்பட்டால் பின்னால் ஒரு இருக்கையை பொருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பைக்கின் பின்பக்கத்தில் மட்கார்ட் ஆனது ஒரு பக்கத்தில் இருந்து பின்பக்க டயருக்கு நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் புதிய யெஸ்டி ரோட்ஸ்டர் எம்கே2 பைக்கின் தோற்றம் மிகவும் அருமையாக உள்ளது. தோற்றத்தை மாற்றியிருப்பதுடன், பைக்கின் என்ஜினையும் 20% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கக்கூடியதாக மாற்றியிருப்பதால் என்ஜின் ஆற்றல் அதிகரித்துள்ளது. இதனால், இத்தகைய பைக்குகளை ஜாலியாக நெடுஞ்சாலைகளில் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2025, 5:00 [IST]
English summary
Jawa yezdi motorcycles launches new roadster mk2 in india price features engine details
மேலும்... #yezdi #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X