ஓலா எல்லாம் ஓரமா போ! இனி இந்த வண்டி தான் செம கெத்து! ஒரு தடவை சார்ஜ் போட்டா இவ்வளவு கி.மீ போகுமா?

ஜிண்டால் வேர்ல்டு வைடு லிமிடெட் நிவனம் இந்தியாவில் ஜிண்டால் மொபிலிட்டிரிக் என்ற தனது துணை நிறுவனத்தின் மூலம் ஆர்40 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. மார்கெட்டில் விற்பனையாகும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் இது வித்தியாசமானதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக துவங்கிவிட்டன. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் பலநிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஜிண்டால் மொலிட்டிட்ரிக் நிறுவனம் தனது ஆர் 40 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்கெட்டில் வெளியிட்டுள்ளது.

Jindal R40 EV
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 35 டீலர்களை வைத்துள்ளது. விரைவில் இதை 100 டீலர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தனது ஆலையில் ஆண்டிற்கு 2.50 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் சொந்தமாக பேட்டரியை தயாரிக்கும் ஆலையை யும் துவங்கியளு்ளது. இந்தியாவில் இப்படைியான ஆலைக்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. பேட்டரிக்காக சீனா போன்ற நாடுகளை நாடிவேண்டிய சூழ்நிலை இருக்கும் இநிலையில் தற்போது இந்நிறுவனமே பேட்டரியை தயாரிக்கும் முடிவை எடுத்துள்ளது.

இந்நிறுவனம் இந்த ஆர்40 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது ஹோமோலோகேஷனிற்காக அனுப்பியுள்ளது. அதிகரப்பூர்வ அப்ரூவல் கிடைத்த பிறகு இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தனித்துவமான தயாரிப்புகளுக்க பெயர் பெற்றதாக இருக்கிறது. இதற்காக சொந்தமாக R&D அமைப்பை வைத்துள்ளது.

இந்த ஆர்40 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த மற்ற விபரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் போட்டால் 135 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று மட்டுமே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வாகன அறிமுகத்தின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை நிறுவி இந்த தொழிலில் தான் எவ்வளவு சிரீஸாக இறங்கியிருக்கிறோம் என அந்நிறுவனம் காட்டியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிண்டால் நிறுவனம் டெக்ஸ்டைல் துறையில் இருந்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முன் வந்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் எந்த அளவிற்கு லாபமானதாக இருக்கும் என்பதை உணர இதை செய்துள்ளது. அதே நேரம் இந்த நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2025, 18:00 [IST]
English summary
Jindal r40 ev unveiled with 165km range features revealed
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+