ரூ. 1.25 லட்சம் மட்டும்தானா!.. பஜாஜ் சேத்தக், வெஸ்பாவுக்கே அழகுல டஃப் கொடுக்கும் போல.. 118 கிமீ போகும்!
"இது இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா".. என ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய நிறுவனம் ஒன்று தயார் செய்திருக்கின்றது. அதுவே தற்போது விற்பனைக்கும் வந்திருக்கின்றது. ஜிதேந்திரா இவி (Jitendra EV), இதுவே அந்த நிறுவனம் ஆகும். இதுவே மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக தற்போது யூனிக் (Yunik) எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுகமாக இதற்கு ரூ. 1.24 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் அறிமுக விலை மட்டுமே ஆகும்.
அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகளும் தொடங்கி இருக்கின்றது. ஆனால், இதன் டெலிவரி பணிகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அன்றே டெலிவரி பணிகள் தொடங்க இருக்கின்றன. மாட்டு பொங்கல் அன்றே ஜிதேந்திரா யூனிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்க இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் அதிகபட்சமாக 118 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 kWh எல்எம்எஃப்பி (LMFP) வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முதல் முறையாக ஹைப்பர் கியர் வகை பவர்டிரெயின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஜிதேந்திரா யூனிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், சைடு ஸ்டாண்டு சென்சார் ரைடர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சாவி இல்லாமல் வாகனத்தை ஓட்டும் வசதி, ஸ்மார்ட் டிஜிட்டல் எல்இடி கிளஸ்டர் மற்றும் எல்இடி ரக லைட்டுகள் போன்ற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 12 அங்குல ட்யூப்லெஸ் டயர், அலாய் வீலுடன் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்ல, ப்ளூடூத் இணைப்பு வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக இதன் பேட்டரியில் ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் அதிக உஷ்ணம் ஏற்பட்டால் அதுகுறித்து எச்சரிக்கும் வசதி வழங்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தின் உச்சமாகும். இந்த மாதிரியான அம்சங்களை வேறு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது.
நிற தேர்வை பொருத்த வரை ஐந்து விதமான ஆப்ஷன்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. மெடோவ் கிரீன், டஸ்க் ப்ளூ, ஃபாரஸ்ட் ஒயிட், வால்கேனோ ரெட் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் ஆகியவையே அவை ஆகும். ஜிதேந்திரா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் மாடலில் இன்னும் சில வேரியண்டுகளை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அவை இப்போது விற்பனைக்கு வந்திருப்பதைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. யூனிக் லைட் மற்றும் யூனிக் ப்ரோ ஆகியவையே அவை ஆகும். இதன் தொடக்க விலை ரூ. 92 ஆயிரமாக இருக்குமாம். ஆனால், இதை இந்த ஆண்டு அக்டோபரிலேயே விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஜிதேந்திரா இவி இந்த மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் அழகு பஜாஜ் சேத்தக்கிற்கு மட்டுமல்ல வெஸ்பா ஸ்கூட்டருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது. இதுமட்டுமல்ல, டிவிஎஸ், ஏத்தர் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய பிராண்டுகளின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இதன் வருகை சவால் விடுக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








