பட வாய்ப்பு எதுவும் கிடைக்கலையா! பைக் விளம்பரம்னு சொன்னதும் ஓடி வந்து நடிச்சிருக்காரு.. இவரு பெரிய நடிகராச்சே!
பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரகாம் ஒருவர் ஆவார். இவரே பிரபல பைக் நிறுவனத்தின் விளம்பர வீடியோவில் நடித்துக் கொடுத்திருக்கின்றார். பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் இந்த விளம்பரத்தில் அவர் நடித்திருக்கின்றாரா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் கிடையாது. அந்த பைக் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரே அவர்தான் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே புதுமுக பைக்கின் விளம்பரத்தில் அவர் நடித்துக் கொடுத்து உள்ளார்.
அப்ரில்லா (Aprilia) நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றான ஆர்எஸ் 457 (RS457) பைக்கின் விளம்பரத்திலேயே அவர் நடித்திருக்கின்றார். இந்த பைக் விளம்பரத்தில் அவர் நடிப்பது இது முதல் முறையல்ல என்பது கவனிக்கத்தகுந்தது. தற்போதைய புதிய விளம்பர வீடியோ பைக் காதலர்களின் கவனத்தையும், ஜான் ஆபிரகாம்-இன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, முன்னதாக வெளியிடப்பட்ட 'ஃபன்' மற்றும் 'லஸ்ட்' ஆகிய விளம்பர வீடியோக்களுக்கு டூ-வீலர் விரும்பிகள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. 76.6 மில்லியன் பார்வையாளர்களை இது கவர்ந்தது. இதைத்தொடர்ந்தே தற்போது 'த்ரில்' எனும் தலைப்பின்கீழ் புதிய வீடியோவை அப்ரில்லா வெளியிட்டு இருக்கின்றது.
இது பைக்கின் சிறப்பையும், பைக்கிற்கும் ரைடர்களுக்கும் இடையே இருக்கும் பந்தத்தையும் வெளிக்காட்டும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் இந்த வீடியோவும் இணைய வாசிகளை இப்போது கவரத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, அப்ரில்லாவின் இந்த பைக் மாடல் மிக சிறந்த திறனை வெளிப்படுத்தக் கூடியது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த வீடியோ உள்ளது.
ஓர் சினிமா பட காட்சியை போல இந்த வீடியோ காட்சிகள் அமைந்திருக்கின்றன. பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு காட்சிகளும் த்ரில் அனுபவத்தை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. நடிகர் ஜான் ஆபிரகாமும் மிக சிறப்பாக செயலாற்றி இருக்கின்றார். ஆகையால், வீடியோவை போல அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக்கும் டூ-வீலர் காதலர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் கொண்ட பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். பிரீமியம் அம்சம் அதிகம் என்பதாலேயே இதன் விலையும் சற்றே அதிகமாக உள்ளது. ரூ. 4.10 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே இந்த பைக் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 457 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி மற்றும் 48 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் இணைக்கப்பட்டு இருக்கும்.
மூன்று விதமான ரைடிங் மோட்கள், மூன்று விதமான லெவல்களைக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் இந்த பைக் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த பைக்கின் முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்-கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், ஆக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீடியோ வாயிலாக பார்வையாளர்களைக் கவர்ந்து இதன் வாயிலாக அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக்கின் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதே அப்ரில்லாவின் நோக்கம் ஆகும். இதன் அடிப்படையிலேயே விளம்பர வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சிகளையும் அது தயார் செய்திருக்கின்றது. அப்ரில்லா ஆர்எஸ்457 கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 (Kawasaki Ninja 400) போன்ற பைக்குகளுக்கு போட்டியாகவே சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








