ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலை பகல், இரவுனு ஓய்வில்லாமல் ஓடுது! ஒரே மாதத்தில் 1 லட்சம் பேர் வாங்கிய ஸ்கூட்டர்
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த உலகளவில் நெட்வொர்க்கை கொண்ட பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம். ஓசூரில் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டிருக்கும் டிவிஎஸ் மோட்டார் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான வாகனங்களை விற்பனை செய்கிறது. 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் விற்பனை செய்யும் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. ஆனால், நாம் தொகுப்பில் பார்க்க போவது, நடந்து முடிந்த 2025 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கையை மட்டும் ஆகும்.
டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 802 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 233 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

வழக்கம்போல், கடந்த மாதத்திலும் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக முதலிடத்தை ஜூபிட்டர் (Jupiter) ஸ்கூட்டர் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 847 ஆகும்.
ஆனால், 2024 ஜனவரி மாதத்தில் வெறும் 74 ஆயிரத்து 225 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஜூபிட்டருக்கு அடுத்து டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக 2வது இடத்தில் எக்ஸ்.எல் (XL) என்கிற மினி பைக் 41 ஆயிரத்து 872 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான எக்ஸ்.எல் பைக்குகளையே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வரிசையில் 3வது இடத்தில் பிரபலமான அப்பாச்சி பைக்குகள் உள்ளன. பல்வேறு விதமான சிசி என்ஜின்களுடன் விற்பனை செய்யப்படும் அப்பாச்சி பைக்குகள் கடந்த ஜனவரியில் மொத்தம் 34 ஆயிரத்து 511 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2024 ஜனவரியில் 31 ஆயிரத்து 222 அப்பாச்சி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் டிவிஎஸ் ரைடர் பைக் 27,382 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 ஜனவரியில் 43,331 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு, அந்த மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2வது 2-வீலராக ரைடர் விளங்கியது.

5வது மற்றும் 6வது இடங்களில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எண்டார்க் ஸ்கூட்டர் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 24,991 மற்றும் 23,795 ஆகும். 7வது இடத்தில் டிவிஎஸ் ரேடியான் பைக் 10,501 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் முறையே ஜெஸ்ட் (9,100), ஸ்போர்ட் (7,016) மற்றும் ரோனின் (3,633) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், ஸ்டார் சிட்டி மற்றும் அப்பாச்சி 310 பைக்குகளையும் டிவிஎஸ் நிறுவனம் மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் இன்னும் குறைவாக உள்ளதால், டாப்-10 லிஸ்ட்டில் இடம்பெறவில்லை. டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் விற்பனை மட்டும் ஒருபக்கம் உயர்ந்துக் கொண்டே செல்கிறது.


Click it and Unblock the Notifications









