காரையே இயங்க வைக்கக்கூடிய என்ஜின் உடன் கவாஸாகி உருவாக்கிய பைக்! விலையை மட்டும் பார்க்காதீங்க!

கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் தனது 2026 மாடல் ஆண்டுக்கான நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் (Ninja 1100SX) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கவாஸாகி நிஞ்சா பைக்குகள் குடும்பத்தில் இது உச்சகட்ட ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காக அமைந்துள்ளது. இசட்.எக்ஸ்-10ஆர் (ZX-10R) போன்ற 200 பிஎச்பி பைக்குகளில் இருந்து வேறுப்பட்டதாக, புதிய நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் ஒரு தனித்துவமான, சவுகரியமான ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்குகள் பிரிவை உருவாக்குகிறது.

அந்த அளவிற்கு உலகளவில் இது ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. 2026 கவாஸாகி நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கின் விலை ரூ.14.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2025 நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் உடன் ஒப்பிடும்போது விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதுப்பித்தலின் முக்கிய அம்சமாக, 2026 நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக் புதிய கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது.

kawasaki ninja 1100sx bike launch

இதன்படி, மெட்டாலிக் பிரில்லியன்ட் கோல்டன் பிளாக்/ மெட்டாலிக் கார்பன் கிரே என்கிற புதிய கலர் ஆப்ஷனில் இந்த பைக்கை வாங்கலாம். இது 2025 நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கிற்கு வழங்கப்பட்ட மெட்டாலிக் கார்பன் கிரே/ மெட்டாலிக் டயப்லோ பிளாக் வண்ணத்திற்கு மாற்றாக அமைகிறது. இதற்கேற்ப, முந்தைய மாடலில் பச்சை நிறத்தில் இருந்த ஹைலைட்கள் இப்போது தங்க நிறமாக மாற்றப்பட்டுள்ளன.

பைக்கின் ஃபேரிங் மற்றும் பெட்ரோல் டேங்கின் மேல் பகுதி, 2025 மாடலில் இருந்த சாம்பல் நிறத்திற்கு பதிலாக பழுப்பு வண்ணத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன் மட்டுமே 2026 நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கை 2025 மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரே காட்சி மாற்றம் ஆகும். நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கின் தனித்துவமான அம்சங்கள் புதிய 2026 மாடலிலும் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளன.

kawasaki ninja 1100sx bike launch

இதில் ஒருங்கிணைந்த பின் இருக்கை அமைப்பு (clean-mount pannier system), சவுகரியமான பைக் ரைடிங் பொசிஷன், கட்டுப்படுத்தப்பட்ட அதிர்வுகள், முழுமையான ஃபேரிங் மற்றும் உயரமான விண்ட்ஸ்கிரீன் மூலம் எதிர்காற்றுத் தடுப்பு, ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) எலெக்ட்ரிக் சாக்கெட் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பயண சூழல் ஆகியவை அடங்கும்.

இயந்திர அமைப்பைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்போர்ட் பைக்குகள் பாணியிலான அலுமினிய டைமண்ட் சேசிஸ் மற்றும் பெரும்பாலான பாகங்கள் மாற்றமின்றி தொடர்கின்றன. முன் பகுதியில் ஷோவா USD டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், ரீ-பவுண்ட் டேம்பிங் மற்றும் ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்ட்மெண்ட் கொண்ட பின்பக்க மோனோ-ஷாக் சஸ்பென்ஷன், டோகிகோ காலிப்பர்களுடன் (கவாஸாகி பிராண்டட்) முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பு மற்றும் பின் சக்கரத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் அமைப்பு ஆகியவை உள்ளன.

மேலும், 19 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க், தரையில் இருந்து 820மிமீ உயரத்தில் ரைடர் இருக்கை, 135 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 235 கிலோ எடை, டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-Channal ABS), ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச், க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய எலக்ட்ரானிக் த்ரோட்டில், டிராக்‌ஷன் கன்ட்ரோல், பை-டைரக்‌ஷ்னல் குயிக்-ஷிஃப்டர், IMU கொண்ட கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மென்ட், பவர் மோடுகள் மற்றும் 4.3 இன்ச் TFT கிளஸ்டர் உடன் ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு போன்ற அம்சங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன.

kawasaki ninja 1100sx bike launch

என்ஜினைப் பொறுத்தவரை, 2026 கவாஸாகி நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் ஆனது அதே 1099சிசி, 4-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, DOHC 4-வால்வு/சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 136 பிஎஸ் ஆற்றலையும், 113 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. இதன் 5வது மற்றும் 6வது கியர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி தனது வரவிருக்கும் அனைத்து மாடல்களையும் 2026 ஆண்டிற்கான தயாரிப்புகளாக மாற்றுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக புதிய நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அனைத்து அம்சங்களும் 2025 மாடலில் இருந்ததைப் போன்றவையே. இருப்பினும், இதன் என்ஜின் அதிக RPM வேகத்தை விட, நடுத்தர ரேஞ்சில் பயனுள்ள ஆற்றலை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, பைக்கின் என்ஜின் இ20 எரிபொருளுக்கு இணக்கமானது ஆகும். இருப்பினும், பைக்கின் விலையை உயர்த்தாததன் மூலம், இந்த ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கின் மதிப்பு அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது என கவாஸாகி தெரிவிக்கிறது. புதிய நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கிற்கான டெலிவரிகள் டிசம்பர் 29 முதல் தொடங்கவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 27, 2025, 15:48 [IST]
English summary
Kawasaki india launches new ninja 1100sx bike check price features all details here
மேலும்... #kawasaki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X