விலையை பார்த்தால் மயக்கமே வருது... எஸ்யூவி கார் வாங்குற விலையில் கவாஸாகி பைக்!!
கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் அதன் புதிய இசட்1100 (Z1100) சூப்பர் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முந்தைய இசட்1100 பைக்கை விட சில வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பெற்றுள்ளது.
2026 கவாஸாகி இசட்1100 பைக், 1,099 சிசி லிக்யுடு-கூல்டு, நான்கு சிலிண்டர் என்ஜின் உடன் வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 134 எச்பி ஆற்றலையும், 7,600 ஆர்பிஎம்-இல் 113 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இசட்1100 மோட்டார்சைக்கிள், கவாஸாகி நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கின் அதே அலுமினிய சேஸிஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஷோவா சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளது. ஸ்டாண்டர்ட் இசட்1100 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் ஷோவா ஃபோர்க்குகளுடன் வரும் நிலையில், உயர் ரக எஸ்.இ வேரியண்ட்டில் ஷோவா ஃபோர்க் மற்றும் ரிமோட் ப்ரீலோட் அட்ஜெஸ்மெண்ட் கொண்ட ஹோலின்ஸ் எஸ்46 மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டாண்டர்ட் இசட்1100 பைக்கின் பிரேக்கிங் அமைப்புகள், நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்கில் உள்ளவற்றுடன் ஒத்திருக்கிறது. புதிய இசட்1100 பைக்கில் கவாஸாகி பிராண்டட் டோகிகோ ரேடியல் காலிப்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இசட்1100 பெரிய அளவில் 310மிமீ டூயல் டிஸ்க்குகள் உடன் வருகிறது. நிஞ்சாவின் 300மிமீ டிஸ்க்குகளை விட இது பெரியது.

இந்த புதிய பைக்கின் விலையுயர்ந்த எஸ்இ வேரியண்ட்டில் மேம்படுத்தப்பட்ட பிரெம்போ எம்4.32 காலிப்பர்கள் மற்றும் இரும்பால்-பின்னப்பட்ட பிரேக் லைன்கள் உள்ளன. இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை விட சிறந்த பிரேக்கிங் செயல்திறனை வழங்குகிறது. இதில் 2 பவர் மோட்கள் (ஃபுல் மற்றும் லோ), 3 நிலைகளை கொண்ட ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும், க்ரூஸ் கண்ட்ரோல், டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவையும் இடம்பெற்று உள்ளன. இவை அனைத்தும் ஐந்து-அச்சு IMU (Inertial Measurement Unit) ஆதரவுடன் இயங்குகின்றன. இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த புதிய மை26 கவாஸாகி இசட்1100 பைக் எபோனி/ மெட்டாலிக் கார்பன் கிரே நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இசட்1100 பைக் கவாஸாகியின் "சுகோமி" வடிவமைப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பைக்கின் என்ஜின் வலுவான லோ-டு-மிட்ரேஞ்ச் ரெஸ்பான்ஸ் மற்றும் துல்லியமான த்ரோட்டில் கண்ட்ரோல் ஆகியவற்றிற்காக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதில் KCMF (கார்னெரிங் மேனேஜ்மென்ட் ஃபங்ஷன்), KIBS (இன்டலிஜென்ட் ஏபிஎஸ்), KTRC (டிராக்ஷன் கண்ட்ரோல்), KQS (குயிக் ஷிஃப்டர்) போன்ற மேம்பட்ட எலக்ட்ரானிக் ரைடர் உதவி அம்சங்களும் உள்ளன.
புதிய இசட்1100 பைக் ஆனது ஸ்போர்ட், ரோடு, மழை என்கிற மூன்று ப்ரீசெட் ரைடிங் மோட்களுடன் சேர்த்து, தனிப்பயனாக்கக்கூடிய ரைடர் மோடையும் வழங்குகிறது. இதில் 5-இன்ச் முழு வண்ண TFT டிஸ்ப்ளே உள்ளது. இது, 'ரைடியோலாஜி தி ஆப்' (RIDEOLOGY THE APP) மொபைல் செயலி வாயிலாக ஒவ்வொரு திருப்புதலுக்கும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கவாஸாகி இசட்1100 பைக் ஆனது சக்தி, துல்லியம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றை இணைக்கிறது. இது 50 ஆண்டுகளுக்கும் மேலான கவாஸாகியின் 'இசட்' (Z) பாரம்பரியத்தின் சிறப்பைக் கொண்டாடும் ஒரு சிறப்பு மைல்கல்லாகும். புதிய இசட்1100 பைக்கின் டெலிவரிகள் 2025 நவம்பர் மாத இறுதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









