இதைவிட கம்மி விலை கவாஸாகியால் பைக்கை கொண்டுவர முடியாது! ஆனா புதிய பைக்கோட விலையே எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கவாஸாகி (Kawasaki) நிறுவனம் புதிய வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.3.49 லட்சமாக நிர்ணயிக்கபட்டு உள்ளது. கவாஸாகியின் வெர்சிஸ் அட்வென்ச்சர் பைக்குகள் வரிசையில் இது மிகவும் கச்சிதமான, விலை குறைவான மற்றும் முதல்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏற்ற மாடலாக வந்துள்ளது.

இதன் 'வெர்சிஸ்' என்ற பெயர் 'பல்நோக்கு அமைப்பு' (Versatile System) என்பதைக் குறிக்கிறது. அதாவது, வார நாட்களில் நகர வீதிகளிலும், வார இறுதி நாட்களில் கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்க விரும்புபவர்களுக்காக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிமிர்ந்த ரைடிங் பொசிஷன் மற்றும் வசதியான இருக்கை ஆகியவை இந்த பைக்கில் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன.

kawasaki versys-x 300 launched

கவாஸாகி ஏற்கனவே வெர்சிஸ் 650 மற்றும் வெர்சிஸ் 1100 பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இப்போது, 300 மாடல் மூலம், எடை குறைவான மற்றும் எளிதான என்ஜின் உடன் அதே அட்வென்ச்சர் சாகச உணர்வை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது. இந்த பைக்கில் 296சிசி லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது அதிகப்பட்சமாக 40 பிஎஸ் பவரையும், 25.7 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின், அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வருகிறது. இது போக்குவரத்து நெரிசலிலும், நெடுஞ்சாலைகளிலும் கியர்களை எளிதாகவும், மென்மையாகவும் மாற்றுவதை உறுதி செய்கிறது.

kawasaki versys-x 300 launched

பல்வேறு சாலை நிலைகளை சமாளிக்கும் வகையில் இதன் சேசிஸ் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், உடைமைகளை வைத்துக் கொண்டும் பின் இருக்கை பயணியை எளிதாக ஏற்றிச் செல்ல முடியும். பள்ளங்கள் மற்றும் சரளைக் கற்கள் நிறைந்த சாலைகளில் சிறந்த சௌகரியத்திற்காக கவாஸாகி இந்த பைக்கில் லாங்-டிராவல் சஸ்பென்ஷனைப் பயன்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்த பைக்கின் முன்புறத்தில் 41மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் வாயு மூலமாக இயங்கக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் முன் சக்கரம் 19-இன்ச்சிலும், பின் சக்கரம் 17-இன்ச்சிலும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டுமே ஸ்போக் சக்கரங்கள் ஆகும். இவை பல்தொழில்நுட்ப டயர்களுடன் வருகின்றன. இவை கரடுமுரடான பரப்புகளிலும், சிறிய சாலைகளிலும் பைக்கை நிலையானதாக வைத்திருக்க உதவுகின்றன.

kawasaki versys-x 300 launched

180மிமீ-இல் நன்கு உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரம்) வழங்கப்பட்டு உள்ளதால், இந்த பைக்கை தைரியமாக ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்லலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் வடிவமைப்பு அட்வென்ச்சர் பைக்குகளின் வழக்கமான தோற்றத்தில் உள்ளது.

இதில் பெரிய பாடி பேனல்கள், உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் நீண்ட பயணங்களுக்கான 17 லிட்டர் கொள்ளளவில் பெரிய பெட்ரோல் டேங்க் ஆகியவை உள்ளன. இருக்கையின் முன்புறம் குறுகலாக இருப்பதால், பைக் ஓட்டுபவர் தனது கால்களை எளிதாக தரையில் வைக்கலாம். பின் இருக்கை அகலமாகவும், வசதிக்காக நன்கு பேட் செய்யப்பட்டும் உள்ளது.

kawasaki versys-x 300 launched

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆனது அனலாக் டச்சோமீட்டர் மற்றும் டிஜிட்டல் திரையின் கலவையாக உள்ளது. இது கியர் நிலை, எரிபொருளின் அளவு மற்றும் பிற பயணத் தகவல்களைக் காட்டுகிறது. மெதுவான பயணத்தின் போது என்ஜினின் வெப்பத்தை பைக் ஓட்டுபவர் மீது படாமல் விலக்கித் தள்ளும் கவாஸாகியின் சிறப்பு குளிரூட்டும் வடிவமைப்பையும் இந்த பைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக் மூலம், கவாஸாகி தனது சாகச உணர்வை இந்தியாவில் பரந்த வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டுள்ளது. வெர்சிஸ்-எக்ஸ் 300 இலகுவானது, நடைமுறைக்கு உகந்தது. மேலும், எந்தவொரு பாதைக்கும் பைக்கை கொண்டு செல்ல விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இத்தகைய பைக்கின் டெலிவரிகள் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 23:59 [IST]
English summary
Kawasaki launches new versys x 300 bike in india check price features all details here
மேலும்... #kawasaki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X