பழைய ஸ்டாக் பைக்குகளை விற்று தீர்க்க கவாஸாகியின் சூப்பர் பிளான்! இதுதான் நமக்கும் நல்ல சான்ஸ்
கவாஸாகி (Kawasaki), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் கடந்த பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. கவாஸாகியில் இருந்து தற்சமயம் பல்வேறு விதமான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பைக்குகள் விற்பனையை அதிகரிக்க கவாஸாகி நிறுவனம் அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பது உண்டு. கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில்தான் தற்போதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது சலுகைகளை கவாஸாகி நிறுவனம் அறிவித்து இருப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதுதான், நிதியாண்டு நிறைவடைய இருப்பது ஆகும். 2024-25ஆம் நிதியாண்டு இந்த மார்ச் மாத 31ஆம் தேதி உடன் நிறையவடைய உள்ளது. அதற்குள் முடிந்தவரையில் ஷோரூம்களில் உள்ள பழைய ஸ்டாக்குகளை விற்பனை செய்யும் முயற்சியாக தற்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள கவாஸாகி பைக்குகளை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.

கவாஸாகி நிஞ்சா 300 (Kawasaki Ninja 300): இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த விலை குறைவான பைக்கின் விலையையும் ரூ.43,000 வரையில் சலுகை விலையாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைவான கவாஸாகி பைக் என்றதும், 1 லட்சம் அல்லது 2 லட்சத்தில் இதன் விலையை எதிர்பார்த்திட வேண்டாம்.
ஏனெனில், இந்த எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.43 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.40,000 குறைக்கப்பட்டு ரூ.3.03 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் சலுகை ஆனது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கில் 296சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச்சை கவாஸாகி நிறுவனம் வழங்குகிறது.

கவாஸாகி நிஞ்சா 500 (Kawasaki Ninja 500): நிஞ்சா 300 பைக்கிற்கு அடுத்து, இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கவாஸாகி பைக் இதுவாகும். சலுகைக்கு முன்பு வரையில் இந்த 500சிசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.5.29 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.4.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய 2025 நிஞ்சா 500 பைக் சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்படும் போதே சலுகை உடன் தான் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்டாலிக் கார்பன் கிரே என்கிற ஒரேயொரு கலர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில் 451சிசி ட்வின்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 44.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 42.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
கவாஸாகி எலிமினேட்டர் (Kawasaki Eliminator): கவாஸாகி நிறுவனத்தின் தாழ்வான க்ரூஸர் (Cruiser) ரக பைக் இதுவாகும். ஆனால், மற்ற க்ரூஸர் பைக்குகள் போல் இல்லாமல், குறைவான எடையிலான சேசிஸ் உடன் எலிமினேட்டர் பைக் உருவாக்கப்படுகிறது. இந்த பைக்கிற்கு கவாஸாகி இந்த முறை அறிவித்துள்ள சலுகை சற்று குறைவே ஆகும். ஏனெனில், ரூ.15,000 பணம் தள்ளுபடி சலுகை மட்டுமே இந்த பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்பு ரூ.5.62 லட்சமாக இருந்த கவாஸாகி எலிமினேட்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.5.47 லட்சமாக குறைந்துள்ளது. மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் கருப்பு என்கிற ஒரேயொரு பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமே இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. நிஞ்சா 500 பைக்கில் பொருத்தப்படும் அதே 451சிசி என்ஜின் தான் சில திருத்தங்கள் உடன் இந்த க்ரூஸர் பைக்கிலும் பொருத்தப்படுகிறது.
கவாஸாகி நிஞ்சா 650 (Kawasaki Ninja 650): நிஞ்சா 500 பைக்கிற்கு அடுத்துள்ள பவர்ஃபுல்லான நிஞ்சா பைக்கான நிஞ்சா 650-க்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிஞ்சா பைக்கிற்கும் ரூ.45,000 பணம் தள்ளுபடியை கவாஸாகி அறிவித்துள்ளது. இதன் மூலமாக, நிஞ்சா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.6.71 லட்சமாக குறைந்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட பின்பும் பைக்கின் விலை இவ்வளவு எனும்போது, அதற்கு முன்பு வரையில் எவ்வளவு என்றுதானே யோசிக்கிறீர்கள். அதற்கு முன்பு ரூ.7.16 லட்சமாக இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இருந்தது. நிஞ்சா 500 பைக்கை போலவே 'லைம் க்ரீன்' என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில் முக்கியமான அம்சமாக டிஜிட்டல் தரத்திலான டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.
கவாஸாகி வெர்ஸஸ் 650 (Kawasaki Versys 650): இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் விற்பனை செய்யும் இரு அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். ரூ.7.77 லட்சமாக முன்பு இதன் எக்ஸ்-ஷோரூம் விலை இருந்த நிலையில், தற்போது பைக்கின் விலையில் ரூ.30,000 குறைக்கப்பட்டு ரூ.7.47 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் டார்க் கிரே-69பி என 2 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கக்கூடிய வெர்ஸஸ் 650 அட்வென்ச்சர் பைக்கில் கவாஸாகி பிராண்டின் டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) வழங்கப்படுகிறது. அத்துடன், நிஞ்சா 650 பைக்கில் வழங்கப்படுவதை போன்று இந்த 650சிசி பைக்கிலும் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் வழங்கப்படுகிறது.
கவாஸாகி இசட்900 (Kawasaki Z900): கவாஸாகி நிறுவனத்தில் அளவில் பெரியதான இன்லைன்-4 சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக் இதுவாகும். இந்த விலையுயர்ந்த நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கிற்கு ரூ.40,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகைக்கு முந்தைய இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரும் விலை ரூ.9.38 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அதில் ரூ.40,000 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த கவாஸாகி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.9 லட்சத்திற்கும் கீழ் குறைந்து, ரூ.8.98 லட்சமாக உள்ளது. மெட்டாலிக் மேட் கிராபேனேஸ்டீல் கிரே மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என 2 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கவாஸாகி பைக் விற்பனை செய்யப்படுகிறது. தனித்துவமான கவாஸாகி பேலன்ஸ்டு சூப்பர்சார்ஜ்டு என்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிறுவனத்தின் இந்த புதிய சலுகைகள் இந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளன. எத்தனை பைக்குகளை வாங்கினாலும், கவாஸாகி பைக்கை வாங்குவது மட்டும் தனி சந்தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மகிழ்ச்சியை இந்த மார்ச் மாதத்தில் குறைந்த விலையில் சலுகைகள் உடன் பெறலாம்.


Click it and Unblock the Notifications









