இந்த பைக்கை வாங்குவதற்கு சொத்தை தான் விற்கனும்! கவாஸாகியில் இருந்து வந்தால் சும்மாவா!
கவாஸாகி (Kawasaki), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவிலும் கவாஸாகி அதன் விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்துவரும் நிலையில், புத்தம் புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கவாஸாகி நிறுவனத்தின் அதிநவீன ஸ்போர்ட்ஸ் (Sports) ரக மோட்டார்சைக்கிளாக புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 'லைம் க்ரீன்' (Lime Green) என்கிற இளம் பச்சை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கவாஸாகி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.11 லட்சத்து 69 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போது புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், டெலிவிரிகள் (Deliveries) விரைவாகவே இன்னும் சில நாட்களில் துவங்கப்பட உள்ளன. கவாஸாகி நிறுவனத்தில் இருந்து இதேபோன்று பல்வேறு நிஞ்சா ஸ்போர்ட்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றிற்கு எந்த விதத்திலும் புதிய இசட்.எக்ஸ்-6ஆர் சளைத்தது இல்லை.
இன்னும் சொல்லப்போனால், கவாஸாகியின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கான நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கை அடிப்படையாக கொண்டதாகவே புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதேநேரம், புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக் அதற்கேற்ப தனித்துவமான டிசைன் ஹைலைட்களை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பைக்கின் முன்பக்கத்தில் காம்பெக்ட்டான வடிவில் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஹெட்லைட்கள் உடன் ஸ்போர்டியான வடிவத்திலான விண்ட்ஷீல்டு பைக்கிற்கு புதுமையான முகப்பு பகுதியை வழங்குகிறது. இவ்வாறான முன்பகுதி உடன் பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சிறப்பான ஹேண்ட்லிங் உடன் செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் பைக்காக நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், பந்தய களங்களில் மட்டுமின்றி, சாதாரணமான சாலைகளிலும் இந்த பைக்கை தாராளமாக பயன்படுத்தலாம்.
இதற்கேற்ப, குறுகிய பாதையிலும் புகுந்து புகுந்து செல்வதற்கேற்ற சேசிஸ் (Chassis) உடன் இசட்.எக்ஸ்-6ஆர் பைக் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் சேசிஸிலில் சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடிய 636சிசி லிக்யுடு-கூல்டு இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் 4.3 இன்ச்சில் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திரையின் மூலமாக 'ரைடியோலாஜி தி ஆப்' வாயிலாக மொபைல் போனை பைக் உடன் இணைக்க முடியும் என்பது மட்டுமின்றி, கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல் (KTRC) உடன் ரைடிங் மோட்களையும் பெறலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தனியாக செயல்படக்கூடிய பிக் பிஸ்டன் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் முழுவதுமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஷோவா ஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
சக்கரங்கள் இரண்டிலும் பைரெல்லி டியாப்லோ ரோஸ்ஸோ-4 டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் மோனோப்ளாக் காலிபர்கள் உடன் 310மிமீ-இல் டபுள் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. கவாஸாகி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகள் வரிசையில் நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கிற்கும், நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கிற்கும் மத்தியில் புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலைமிக்கவை ஆக இருப்பினும், இந்தியாவில் எப்போதுமே கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு ஓரளவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications








