ரூ. 60,000 குறைச்சுட்டாங்க.. இந்தியர்கள வளச்சுபோட வேற வழி தெரியல.. அந்த 100 அதிர்ஷ்டசாலிகள் யாரோ!..

ஹங்கேரியன்-னைச் சேர்ந்த இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கீவே (Keeway), இந்தியாவில் அதன் அப்டேட் செய்யப்பட்ட கே300 எஸ்எஃப் (K300 SF) பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக இந்த பைக் மாடல் நாட்டில் கீவே கே300என் (K300N) எனும் பெயரிலேயே சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அப்டேட்டின்கீழ் இந்த பெயரை மாற்றியிருக்கின்றனர். லுக் மற்றும் சிறப்பம்சங்கள் சிலவும் இதனுடன் சேர்த்து அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. கே300 எஸ்எஃப் ஓர் நேக்கட் ஸ்ட்ரீட் ரக பைக் மாடல் இதுவாகும்.

இந்த பைக்கை இந்தியாவில் சிகேடி வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, கீவே நிறுவனம். அறிமுகமாக இந்த பைக்கிற்கு மிக மிக குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.69 லட்சம் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Keeway k300 sf launches with new price

இது ரூ. 60 ஆயிரம் குறைவான விலை ஆகும். ஆனால், இந்த விலையில் நீண்ட நாட்களுக்கு கீவே கே300 எஸ்எஃப் பைக் விற்பனைக்குக் கிடைக்காது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சொல்லப் போனால் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டும இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே முதல் நூறு வாடிக்கையாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் கே300என் பைக்கை விற்பனைச் செய்ய கீவே முன் வந்திருக்கின்றது. நூறு வாடிக்கையாளர்களுக்கு பின்னர் எவ்வளவு ரூபாய் உயர்த்தப்படும் என்பது தெரியவில்லை. ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய துள்ளியமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அதேவேளையில், ரூ. 60 ஆயிரம் உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் பைக் மாடலே கீவே கே300என் ஆகும். இந்த பைக்கில் 292.4 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.1 பிஎச்பி பவரை 8,750 ஆர்பிஎம்மிலும், 25 என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்சின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் வசதிக் கொண்ட கியர்பாக்ஸ் ஆகும்.

இந்த பைக்கில் சிறந்த இயக்க அனுபவத்திற்காக யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக இரண்டு வீல்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், எல்இடி திரை முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் விதமாக கே300 எஸ்எஃப் பைக் மாடலில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கை இப்போது மூன்று விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். அவை சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகும்.

இந்தியாவில் இந்த பைக்கின் வருகை கேடிஎம் (KTM) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போது இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ. 3 ஆயிரம் முன் தொகையிலேயே இந்த பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ. 60 ஆயிரம் குறைவான விலையில் கீவே கே300 எஸ்எஃப் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருப்பது பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, கேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு இந்த தகவல் பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 19:39 [IST]
English summary
Keeway k300 sf launched in india with new price of rs 1 69 lakh for first 100 customers
மேலும்... #keeway #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+