கம்மி விலை, சூப்பர் ஸ்டைலில் வந்துடுச்சு கைனடிக் டிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கைனடிக் வாட்ஸ் அண்ட் வோல்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய டிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 2 விதமான வேரியன்ட்களி்ல விற்பனைக்கு வருகிறது. 1980-90களில் பிரபலமான இந்த வாகனத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1980 -90களில் டூவீலரில் புரட்சியை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் ஸ்கூட்டரை பிரபலமாக்கிய நிறுவனம் கைனடிக். இந்நிறுவனம் கைனடிக் டிஎக்ஸ் என்ற பெயரில் அந்த காலத்தில் விற்பனை செய்த ஸ்கூட்டர் மிகப்பெரிய பிரபலமாகி சிறப்பாக விற்பனையானது. ஆனால் காலம் மாற மாற இந்த ஸ்கூட்டர் காணாமல் போனது மேலும் இந்த நிறுவனமும் காணாமல் போனது.

Kinetic DX Electric Scooter launch

ஆனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக களமிறங்கி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரத்தியகமாக தயாரிக்க கைனடிக் கிரீன் என்ற நிறுவனத்தை துவங்கியது. இந்நிறுவனம் ஏற்கனவே கைனடிக் லூனா என்ற பெயரில் ஒரு எலெக்ட்ரிக் மொப்பட்டை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக கைனடிக்வாட்ஸ் அண்ட் வோல்ட் என்ற பெயரில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களாக மோட்டார், பேட்டரி, கண்ட்ரோல்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்நிறுவனம் தற்போது கைனடிக் டிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் ஏற்கனவே பெட்ரோல் ஸ்கூட்டரில் விற்பனை செய்த கைனடிக் டிஎக்ஸ் ஸ்கூட்டரை அப்டேட் செய்த நவீன அம்சங்களும் கைனடிக் டிஎக்ஸ் இவியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது டிஎக்ஸ் மற்றும் டிஎக்ஸ் பிளஸ் ஆகிய 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

Kinetic DX Electric Scooter launch

இந்த ஸ்டைலிங்கை பொருத்தவரை பழைய கைனடிக் டிஎக்ஸ் ஸ்கூட்டரி்ல உள்ள அதே ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. சில மார்டனான ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் பழைய வாகனத்தை நினைவுபடுத்தினாலும் பார்க் மார்டனாகவும் ஃபிரஷ்ஷான லுக்கிலும் இருக்கிறது.

இதில் எல்இடி ஷெல்ட்லைட், எல்இடி டிஆர்எல், ஸ்டப்பி வைசர்கள், உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 4.8 kW ஹப் மவுண்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 2.6 kWh எல்எஃப்பி பேட்டரிவகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

Kinetic DX Electric Scooter launch

இந்த ஸ்கூட்டரில் ரேஞ்ச், பவர், டர்போ ஆகிய 3 விதமான டிரைவ் மோடுகள் உள்ளன. இது போக ரிவர்ஸ் மோடில் பார்க்கிங் அசிஸ்ட் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இ்த ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் , 8.8 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பில்டு இன் ஸ்பீக்கர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஹில் ஹோல் டு அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியன்டாட டிஎக்ஸ் + வேரியன்டில் டெலிகைனடிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜியோ ஃபென்ஸிங், வாகன டிராக்கிங், ஃபைன்டு கைனடிக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ வாரண்டி உள்ளது. நீட்டிக்கப்பட்ட வாரண்டியாக 9 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரை தற்போது வெறும் 40,000 ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மட்டுமே புக்கிங் நடக்கும். இதன் விலையை பொருத்தவரை பேஸ் வேரியன்டான டிஎக்ஸ் வேரியன்ட் ரூ1.11 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியன்டான டிஎக்ஸ் + வேரியன்ட் ரூ1.17 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்கெட்டில் பஜாஜ் சேத்தக், ஓலா, டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் அதற்கு போட்டி போடும் வகையில் இதன் வடிவமைப்பும் விலையும் இருக்கிறது. நிச்சயம் இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் மிகப்பெரிய அளவிற்க விற்பனை பெற வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 14:00 [IST]
English summary
Kinetic dx electric scooter launch india price specs
மேலும்... #kinetic #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X