பஜாஜ் உடன் போட்டி எல்லாம் இப்போ எடுப்படுமா? 1980-90 சமயத்தில் இருந்த கதையே வேறு!
கைனெட்டிக் என்ஜீனியரிங் (Kinetic Engineering) நிறுவனத்தில் இருந்து பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் டி.எக்ஸ் (DX) ஸ்கூட்டர் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1980- 90 காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த டி.எக்ஸ் ஸ்கூட்டரை கைனெட்டிக் என்ஜீனியரிங் நிறுவனம் நேரடியாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்தது. ஆனால், புதிய டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் (Kinetic Watts & Volts) என்கிற துணை நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்தே ஆட்டோமொபைல் (Automobile) வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறிவிட்ட கைனெட்டிக் என்ஜீனியரிங், அதற்காக கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் என்கிற தனது துணை நிறுவனத்தை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில், கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டி.எக்ஸ் ஸ்கூட்டருக்கும், பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் விற்பனையில் பெரிய போட்டி இருக்கும்.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் சேத்தக் உடன் கைனெட்டிக் டி.எக்ஸ் ஸ்கூட்டர் போட்டியிடுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்த பகை தொடர்கிறது. இத்தகைய இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் சுருக்கமாக பார்க்க போகிறோம்.
பேட்டரி & ரேஞ்ச்: பஜாஜ் சேத்தக்கை காட்டிலும் சிறிய அளவிலான பேட்டரி தான் கைனெட்டிக் டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதனை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக ஸ்கூட்டர் இயங்கக்கூடிய தொலைவும் குறைவாகவே இருக்கும்.
| Category | Kinetic DX EV | Bajaj Chetak EV |
| Underseat Storage | 37 litres | 35 litres + 5-litre front box |
| Display | 8.8-inch colour LCD (retro design) | 5-inch TFT touchscreen |
| Motor Output | 4.8 kW (hub-mounted) | 4.2 kW (hub-mounted) |
| Top Speed | 80 km/h (DX), 90 km/h (DX+) | 73 km/h |
மோட்டார் & செயல்படுதிறன்: பேட்டரியை சிறியதாக பெற்றாலும் எலக்ட்ரிக் மோட்டாரை பெரியதாக பெறுவதால் புதிய கைனெட்டிக் டி.எக்ஸ் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகமும் அதிகமாக இருக்கிறது.
| Specification | Kinetic DX EV | Bajaj Chetak EV |
| Motor Output | 4.8 kW (hub-mounted) | 4.2 kW (hub-mounted) |
| Top Speed | 80 km/h (DX), 90 km/h (DX+) | 73 km/h |

மற்ற சிறப்பங்கள்: கைனெட்டிக் டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் அதிக இடவசதி கிடைத்தாலும், சேத்தக்கில் ஹேண்டில்பாருக்கு கீழேயும் 5 லிட்டர்கள் கொள்ளளவில் தனியாக இடவசதி கிடைப்பது சிறப்பாகும்.
| Feature | Kinetic DX EV | Bajaj Chetak EV |
| Underseat Storage | 37 litres | 35 litres + 5-litre front box |
| Display | 8.8-inch colour LCD (retro design) | 5-inch TFT touchscreen |
விலை: புதிய கைனெட்டிக் டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் பஜாஜ் சேத்தக் குறைந்த விலையிலும் கிடைக்கிறது; அதேநேரம் அதிக விலையிலும் கிடைக்கிறது.
| Variant | Price (Ex-showroom) |
| Kinetic DX EV | Rs 1.11 lakh - Rs 1.17 lakh |
| Bajaj Chetak EV | Rs 99,900 - Rs 1.22 lakh |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு வந்தவர்களுக்கு கைனெட்டிக் டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் சிறிய குழப்பத்தை தரலாம். ஆனால், 1980- 90 சமயத்தில் பஜாஜ் மற்றும் கைனெட்டிக் நிறுவனங்களுக்கு இடையே இருந்த போட்டி வேறு, இப்போது இருப்பது முற்றிலுமாக வேறு ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு பெரிய அளவிலான ஷோரூம் & சர்வீஸ் நெட்வொர்க்கை பஜாஜ் ஆட்டோ தற்போது கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








