1970 சமயத்தில் பஜாஜின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய மொபெட்! இத்தனை வருஷம் கழித்து எலக்ட்ரிக் அவதாரில்!
கைனெட்டிக் லூனா (Kinetic Luna), இந்தியாவில் ஒரு சமயத்தில் மிக பிரபலமாக இருந்த மொபெட் (Moped) வாகனங்களுள் ஒன்று. பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் விஜய் சூப்பர் (Vijay Super) உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் பிரபலமாக இருந்த 1970- 80 சமயத்திலேயே கைனெட்டிக் லூனா மொபெட்டை வாங்க சில கஸ்டமர்கள் இருந்தனர். அப்போதே பிரபலமாக இருந்த கைனெட்டிக் லூனா மொபெட் ஆனது பல வருடங்கள் கழித்து எலக்ட்ரிக் வெர்சனில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், புதிய இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் டிசைனுக்கான காப்புரிமை ஆனது உற்பத்தி நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.
கைனெட்டிக் இன்ஜினீயரிங் (Kinetic Engineering), 1972ஆம் ஆண்டில் கைனெட்டிக் லூனா மொபெட்டை அறிமுகம் செய்த நிறுவனம். தற்போதும் இந்த நிறுவனம் தான் இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையில் உள்ள இ லூனாவை அப்டேட் செய்து அறிமுகம் செய்யும் பணிகளில் கைனெட்டிக் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இன்னும் சில மாதங்களில் புதிய இ லூனா எலக்ட்ரிக் மொபெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு இடையில், புதிய இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் புதிய டிசைனுக்கான காப்புரிமையை அரசாங்கத்திடம் கைனெட்டிக் நிறுவனம் பதிவு செய்து உள்ளது.
இதுதொடர்பாக இணையத்தில் கசிந்துள்ள படத்தில், தற்போதைய இ லூனாவிற்கும், புதிய இ லூனாவிற்கும் இடையே சில வித்தியாசங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, வாகனத்தில் ரைடர் இருக்கைக்கும், ஹேண்டில்பாருக்கும் இடையே பேட்டரி பொருத்தப்படும் பகுதி வழக்கத்தை விட பெரிய அளவில் இருப்பதை காண முடிகிறது.
இதனால், புதிய இ லூனா மொபெட்டில் அதிக ரைடிங் ரேஞ்ச்சை வழங்க கைனெட்டிக் நிறுவனம் விரும்புவதை அறிய முடிகிறது. தற்சமயம் இ லூனாவில் 2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப் படுகிறது. இது 110கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக் கூடியதாக உள்ளது.

அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 110கிமீ தொலைவிற்கு இ லூனாவை கொண்டு செல்ல முடிகிறது. புதிய இ லூனாவில் இந்த ரேஞ்ச் ஆனது 200கிமீ ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய இ லூனாவில், பேட்டரியை வாகனத்தில் இருந்து தனியாக கழற்றும் வகையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில், அப்போதுதான் சார்ஜிங் நேரம் ஆனது 4 மணிநேரங்களாக குறையும். புதிய கைனெட்டிக் இ லூனா அறிமுக தேதி குறித்து இதுவரையில் எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை. ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில், வருகிற தீபாவளி பண்டிகை காலத்தின் போது அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் மொபெட்கள் மிகவும் குறைவே ஆகும். ஆதலால், துவக்கத்திலேயே முடிந்தவரையில் கஸ்டமர்களை கவர கைனெட்டிக் நிறுவனம் விரும்புகிறது. அதன் வெளிப்பாடாகவே புதிய இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டை பார்க்கிறோம். தற்போது வெளியாகி உள்ள புதிய இ லூனாவின் டிசைன் சூப்பராக இருந்தாலும், இந்த எலக்ட்ரிக் மொபெட் விற்பனைக்கு வந்த பின்பு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கவே ஆவலாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications








