1970, 80களில் காலேஜ் பசங்க வைத்திருந்த பைக்! பட்டி டிங்கரிங் பார்த்து அப்படியே களம் இறக்கி இருக்காங்க

டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக்கை நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்; குறைந்தப்பட்சம் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக் தற்சமயம் விற்பனையில் உள்ளது. இந்திய பைக் மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் பைக்குகளுள் டிவிஎஸ் எக்ஸ்.எல் ஒன்றாகும். மற்ற பைக்குகளுடன் ஒப்பிடுகையில் இதன் தோற்றம் மிகவும் வித்தியாசமானது. ஸ்கூட்டர் போன்றதான தோற்றம்; ஆனால் இதனை ஸ்கூட்டரில் சேர்க்க முடியாது. இவ்வாறான பைக்குகளை மினி பைக் என அழைக்கின்றனர். குறிப்பாக, கிராம புறங்களில் வசிப்போரின் உற்ற நண்பனாக, அதிக மைலேஜ்ஜை தரக்கூடிய பைக்காக இந்த டிவிஎஸ் தயாரிப்பு உள்ளது.

டிவிஎஸ் மோட்டாருக்கு முன்பே இந்த ஐடியாவில் கைனெக்டிக் (Kinetic) நிறுவனம் லூனா (Luna) பைக்கை விற்பனை செய்தது. இப்போது அல்ல 1970, 80ஆம் காலக்கட்டத்தில். ஐரோப்பாவில் விற்பனையில் இருந்த பியாஜியோ சியோ (Piaggio Ciao) என்கிற மினி பைக்கின் அடிப்படையிலானதாக கைனெக்டிக் லூனா உருவாக்கப்பட்டது. அதாவது, இரண்டும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

kinetic green e luna tvc

1970, 80களில் வெளியான திரைப்படங்களில் கைனெக்டிக் லூனா பைக்கை பார்க்க முடியும். கல்லூரி மாணவர்களாக நடிப்பவர்கள் கூட லூனாவை பயன்படுத்துவது போன்று காட்சிகள் இருக்கும். அதாவது, அந்த சமயத்தில் மிகவும் ஸ்டைலிஷான பைக்காக இத்தகைய மினி பைக் பார்க்கப்பட்டது. அதன்பின் காலங்கள் உருண்டோடின; புதியது புதியதாக பல்வேறு பைக்குகள் வந்தன.

கைனெக்டிக் நிறுவனமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியது. அப்போதுதான் இந்த நிறுவனத்தை கை கொடுத்து தூக்கிவிட்டது போல எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்க மக்கள் ஆரம்பித்தனர். பெயரை 'கைனெட்டிக் க்ரீன்' (Green) என மாற்றிக் கொண்டு கைனெட்டிக் நிறுவனம் களமிறங்கியது. மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் அதிகம் வாங்குகின்றனர் என்பதை அறிந்து சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி அறிமுகம் செய்தது.

kinetic green e luna tvc

இருப்பினும், 1970களில் விற்பனையில் இருந்த லூனா இப்போது இல்லையே என்பது மனதை உறுத்தியது. இந்த எண்ணம் கைனெக்டிக் க்ரீண் நிறுவனத்திற்கும் இருந்திருக்கும் போல... கடந்த 2024ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ லூனாவை அறிமுகம் செய்தது. அதாவது, எலக்ட்ரிக் பைக்காக ரூ.70 ஆயிரத்தில் இ லூனா களமிறக்கப்பட்டது.

இந்த நிலையில், கைனெக்டிக் இ லூனா எலக்ட்ரிக் பைக்கின் மூன்று விளம்பர வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 'வா என் லூனா' (Chal Meri Luna) என்கிற விளம்பர பஞ்ச் டைலாக் உடன் இ லூனா பைக்கை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளை கைனெக்டிக் க்ரீன் நிறுவனம் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே புதியதாக தொலைக்காட்சி விளம்பர வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

kinetic green e luna tvc

ஒரு வீடியோவில், இ லூனாவில் பொருட்களை கொண்டு செல்ல சவுகரியமாக இருக்கும் இடவசதியையும், மற்றொன்றில் நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த வாகனத்தில் எவ்வாறு எளிதாக நுழைந்து செல்லலாம் என்பதும் காட்டப்பட்டுள்ளது. 3 விளம்பர வீடியோக்களிலும் இ லூனாவில் இருந்து தனியாக வெளியே எடுக்கக்கூடிய அதன் பேட்டரி சிஸ்டம் ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'வா என் லூனா' என்பது 1970, 80களில் கைனெக்டிக் லூனா மினி பைக்கை மக்கள்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பயன்படுத்தப்பட்ட வசனம் ஆகும். அந்த காலத்தில் ரேடியோக்களில் அடிக்கடி இந்த வசனத்தை இந்தி மொழியில் கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வசனத்திற்கு அப்படி ஒரு பவர் இருப்பதினாலேயே இதனை புதிய மாடர்ன் இ லூனாவிற்கும் கைனெக்டிக் க்ரீன் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2025, 8:00 [IST]
English summary
Kinetic green e luna tvc video revealed with chal meri luna tagline
மேலும்... #kinetic #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X