எவ்ளோ கிமீ ஓடி இருந்தாலும் பிரச்னை இல்ல.. வேணாம்னு தோன்றிருச்சா.. உடனே எடுத்துட்டு போய் ரிட்டர்ன் பண்ணிடலாம்..

வாடிக்கையாளர்களைக் கவர சிறப்பு சலுகைகளை வாகன உற்பத்தியாளர்கள் அறிவிப்பது ஒன்றும் புதிதல்ல, அது வழக்கமான ஒன்றே. ஆனால், சமீப காலமாக ஒரு சில வாகன உற்பத்தியாளர்கள் யாரும் நம்ப முடியாத மற்றும் இதுவரை யாரும் பார்த்திராத ஆஃபர்களையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த மாதிரியான ஓர் அறிவிப்பை பற்றியே தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கைனடிக் கிரீன் (Kinetic Green), இதுவே அந்த யாரும் இதுவரை கண்டிராத திட்டத்தை அறிவித்து இருக்கும் நிறுவனம் ஆகும்.

அது, நிச்சயமான வாகனத்தை திரும்பிப் பெற்றுக் கொள்ளும் (Assured Buy Back Offer) திட்டத்தையே நாட்டில் அறிவித்து இருக்கின்றது. இந்த திட்டம் இந்தியர்களுக்கும், புதிய வாகன உரிமையாளர்களுக்கும் ஒன்று புதிதல்ல என்று நீங்கள் நினைக்கலாம். இந்த திட்டம் வேண்டுமானால் உங்களுக்கு பழையதாக தெரியலாம்.

Kinetic green e luna offer

ஆனால், முதல் முறையாக எல்லையில்லா கிமீட்டர் பயன்பாட்டிற்கு பின்னரும் வாகனத்தை திரும்புப் பெற்றுக் கொள்வோம் என்கிற திட்டத்தை அது அறிவித்து இருக்கின்றது. ஆமாங்க, ஆயிரம், லட்சம் என எத்தனை கிமீ வாகனம் ஓடி இருந்தாலும் நிறுவனத்தின் புதிய பைக்-பேக் திட்டத்தின்கீழ் அவர்களே அவ்வாகனத்தை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வார்கள்.

இதற்கு நிச்சயம் ரூ. 36 ஆயிரம் வரை வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பிரத்யேகமாக இ-லூனாவிற்காக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் மொபட் இ-லூனா ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Kinetic green s unlimited km assured buyback for e-luna

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போகு கைனடிக் கிரீன் நிறுவனம் இந்த தரமான அறிவிப்பை அறிவித்து இருக்கின்றது. இத்தகைய அறிவிப்பை இந்தியாவில் வெளியிடும் முதல் நிறுவனம் நாங்கள் தான் என அது பெருமிதத்துடன் தெரிவித்து இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் அது நிர்ணயித்து இருக்கின்றது.

குறைந்தபட்சம் அவ்வாகனம் 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு வாகனத்தை வைத்து அடி-அடியென வெளுத்து வாங்கிவிட்டு, அதை பிடிக்கவில்லை என கூறி ரிட்டர்ன் செய்துவிட்டால் ரூ. 36 ஆயிரம் வரை நமக்கு மீண்டும் கிடைக்க நேரிடும்.

எனவே, இந்த திட்டத்தால் வரும் நாட்களில் இ-லூனாவின் விற்பனை சற்றே சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கைனடிக் இ-லூனா இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ் 2 (X 2) மற்றும் எக்ஸ் 3 (X 2) ஆகியவையே அவை ஆகும்.

எக்ஸ் 2 ஓர் முழு சார்ஜில் 110 கிலோ மீட்டர் ரேஞ்ஜையும், எக்ஸ் 3 ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜையும் தரும். இந்த மொபட்டில் 1.2 kW மோட்டாரையே வழங்கி இருக்கின்றனர். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர் ஆகும்.

இந்தியாவின் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க இந்த வேகமே போதுமானது ஆகும். இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக நான்கு மணி நேரங்கள் தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் ரூ. 69,990 மற்றும் ரூ. 72,490 என்கிற விலையிலேயே இ-லூனா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜ், பெரிய டிஜிட்டல் திரை, ஸ்போக் வயர் வீல் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களையே இந்த இ-மொபட்டில் கைனெடிக் கிரீன் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்களுடன் சேர்ந்தே இரட்டிப்பான வரவேற்பை கவர இருக்கின்றது புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் பை-பேக் திட்டம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இ-வாகனங்கள் மீது நம்பிக்கை இல்லாதோரையும் கவரும் விதமாக கைனெடிக் கிரீன் நிறுவனம் சூப்பரான பை-பேக் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை மிக அதிக அளவில் அது கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2025, 5:00 [IST]
English summary
Kinetic green launches industry first unlimited km assured buyback offer on e luna
மேலும்... #kinetic #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+