322கிமீ-க்கு சார்ஜ் பற்றிய கவலையே வேண்டாம்! 90 ஆயிரம் ரூபாயில் இப்படியொரு ஸ்கூட்டரை கொடுக்க பெரிய மனசு வேணும்!
கோமகி எலக்ட்ரிக் (Komaki Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனங்களுள் ஒன்று. கோமகி பிராண்டில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது புதியதாக எக்ஸ்.ஆர்7 (XR7) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிளாசிக்கான தோற்றத்தில், இன்றைய கால மாடர்ன் தொழிற்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும் புதிய கோமகி எக்ஸ்.ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.89 ஆயிரத்து 999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய தோற்றத்திலான ஸ்கூட்டர்களை 1990, 2000ஆம் காலக்கட்டங்களில் பார்த்து இருப்போம்.

அத்தகைய ஸ்கூட்டரை தற்போது எலக்ட்ரிக் மோட்டார் உடன் வாங்குவது சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ள கோமகி எலக்ட்ரிக் நிறுவனம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுவதும், ஹேண்டில் செய்வதும் எளியது எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆட்டோமேட்டிக் வசதிகள் மற்றும் வயர்லெஸ் (Wireless) வசதிகள் உடன் புதிய எக்ஸ்ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், டிஸ்க் பிரேக்குகள், 3000-வாட் பி.எல்.டி.சி (BLDC) எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் வயர்லெஸ் கண்ட்ரோலர் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. இவற்றுடன், ஸ்கூட்டரின் வேகத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் சென்சார்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம்-பாஸ்பேட் (Lipo4) பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 322கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னை முழுவதும் பகுப்பாய்வு செய்து ஏதேனும் பழுதுகள் உள்ளன என்பது குறித்தும் உரிமையாளரிடம் தெரிவிக்கும் வகையில் வசதிகள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய கோமகி எக்ஸ்.ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது 3000- 5000 முறை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தொழிற்நுட்பங்களை கொண்டதாக உள்ளது.
3000- 5000 என்கிற எண்ணிக்கை ஆனது மிக அதிகம் என்பதால், கோமகி எக்ஸ்.ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தைரியமாக தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், அவை தீப்பிடிப்பு உள்ளாக வாய்ப்புள்ளது என்பதாகும். ஆனால், அதனை புதிய எக்ஸ்.ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முடிந்தவரையில் தடுத்துள்ளதாக கோமகி எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய எக்ஸ்.ஆர்7 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து கோமகி எலக்ட்ரிக் வைகல்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் குஞ்சன் மல்ஹோத்ரா கூறுகையில், "ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் நீண்ட தூரத்துக்கு இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம், அன்றாட போக்குவரத்துகளை மறுவரையறை செய்து கோமகி தனது தயாரிப்புகளை அதிகரிக்க தீர்மானித்து உள்ளது.
புதிய மாடல் ஆனது கிளாசிக்கான அழகியல் மற்றும் அதிநவீன புதுமைகளின் சங்கமத்தை கொண்டு வருவதற்காக முழுமையான பரிசீலனைக்கு பிறகு வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக, இது வாகனத்தின் செயல்திறனை வலுப்படுத்துகிறது. இது ஒரே நேரத்தில் ஸ்டைலான மற்றும் சூற்றுச்சூழலுக்கு உகந்த சவாரிக்கான நுழைவாயிலை திறக்கிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு என கஸ்டமர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே கோமகி எலக்ட்ரிக் நிறுவனம் அவ்வப்போது புதியது புதியதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்.ஆர்7 ஆனது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








