இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 67,999 மட்டுமே.. ஓலா சோலி முடிஞ்சு போச்சுனு நினைச்சுக்கோங்க.. 200 கிமீ வரை போகலாம்
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் மிகப் பெரிய அடியை வாங்க தொடங்கவிட்டது. சென்ற ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எனும் ஒற்றை மாடலிடம் அது மாபெரும் அடியை அது வாங்கியது. எப்போதுமே நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்தநிலையில், தற்போது அது இந்த இடத்தை நழுவ விட்டுவிட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே வரும் நாட்களில் இன்னும் இந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனையில் அடியை வாங்குமோ என்கிற சந்தேகமும், அச்சமும் எழும்பி இருக்கின்றது.
ஏனெனில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சில நிறுவனங்கள் குறைவான விலையில் எலெக்ட்ரி டூ-வீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கி இருக்கின்றன. அந்தவகையில், இப்போதும் ஓர் நிறுவனம் மலிவு விலையில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்தியாவைச் சேர்ந்த கோமகி எலெக்ட்ரிக் நிறுவனமே அதுவாகும். எஸ்இ எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது எஸ்இ ப்ரோ (SE Pro), எஸ்இ அல்ட்ரா (SE Ultra) மற்றும் எஸ்இ மேக்ஸ் (SE Max) ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.
இதில் முதல் ஒன்றிற்கே ரூ. 67 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டாவது மாடலுக்கு ரூ. 76 ஆயிரத்து 999-ம் மற்றும் மூன்றாவது ஒன்றிற்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மூன்று லுக்கில் ஒரே மாதிரியாக இருந்தாலும், பேட்டரி மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதில் மட்டும் லேசான மாற்றங்களைக் கொண்டிருக்கும். எஸ்இ ப்ரோ மாடலில் 2.75 kW திறன் கொண்ட என்ஏஜிஆர் (NAGR) ரக பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
அதேவேளையில், எஸ்இ அல்ட்ராவில் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ முதல் 140 கிமீ வரையில் ரேஞ்ச் தரக் கூடிய பேட்டரி பேக்கையே வழங்கி இருக்கின்றனர். 2.7 kW எல்ஐபிஓ 4 (LiPo4) ரக பேட்டரி பேக்கே இதில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
கடைசியாக இருப்பது எஸ்இ மேக்ஸ் ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 4.2 kW திறன் கொண்ட எல்ஐபிஓ 4 ரக பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த வகை பேட்டரி பேக் ஓர் அதிக பாதுகாப்பு திறன்மிக்கது என கூறப்படுகின்றது.
இதுதவிர, நீடித்து உழைக்கும் தன்மை, அதிக ரேஞ்ச் தரும் திறன் ஆகியவற்றையும் இது கொண்டிருக்கும். தொடர்ந்து, இந்த எஸ்இ சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இரண்டு சார்ஜர்கள், டிஎஃப்டி திரை, டூயல் டிஸ்க் பிரேக்குகள், நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். நகர்புறங்களில் பயன்படுத்துவதற்கு போதுமான வேக திறன் இதுவாகும். இந்த ஸ்கூட்டர் குடும்பங்களுக்கான சிறந்த வாகனமாக இருக்கும் என்பதும் தெரிகின்றது. இதற்கு சான்றாக பெரிய இருக்கையை அது கொண்டிருக்கின்றது. மேலும், 45 லிட்டர் அளவில் ஸ்டோரேஜ் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அத்துடன், சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப், அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம், 12 அங்குல அலாய் வீல் மற்றும் பிரகாசமாக ஒளிரும் திறன் கொண்ட எல்இடி லைட் உள்ளிட்டவற்றையும் இந்த ஸ்கூட்டரில் கோமகி எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது. ஆகையால், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை மிகப் பெரிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வருகை ஓலா எலெக்ட்ரிக்-கிற்கு மேலும் பேரிடையை இறக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக மலிவான விலையில் இது விற்பனைக்கு வந்திருப்பதால் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








