இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 52,999 மட்டுமேவா! எல்லாரும் ஒன்றிற்கு இரண்டா வாங்க போறாங்க.. பெண்களே புறப்பட தயாரா!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோமகி எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் (Komaki Electric Vehicles)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது நாட்டில் மிகவும் மலிவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்3 (X3), இதுவே அந்த மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 52,999 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் ஆகும். விலை குறைவானதாக இருந்தாலும் இதில் சிறப்பம்சங்களை மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது கோமகி நிறுவனம். அந்தவகையில் மிக முக்கியமான அம்சமாக டிஜிட்டல் திரை மற்றும் பன்முக ரைடிங் மோடை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றனர்.

Komaki x3 series electric scooters launched

இதுமட்டும் அல்ல உயர் செயல் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கையே இதில் வழங்கி இருக்கின்றனர். இந்த பேட்டரி பேக் மிக வேகமாக சார்ஜாகும். அதேவேளையில், அதிக ரேஞ்சையும் வழங்கும். அதாவது, அதிக தூரம் பயணிக்கவும் இது உதவியாக இருக்கும்.

இதேபோல், இளைய தலைமுறையினரைக் கவரும் நோக்கில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் இதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இதன் உருவம் காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் உள்ளது. இத்துடன், இதன் ஸ்டைலான லுக்கிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக பிரீமியம் வகை அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Komaki x3 series electric scooter side view

தொடர்ந்து, கவர்ச்சியான எல்இடி லைட், ரியர் வியூ மிர்ரர் மற்றும் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்மார்ட் அசிஸ்ட், பார்க்கிங் ரிப்பேர் அசிஸ்ட், ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை இது தன்னுள் தாங்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 3000 W திறன் கொண்ட ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும்.

Komaki x3 series electric scooter front view

இதேபோல், இதில் ஓர் முழு சார்ஜில் 75 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு திட்டம் ஒன்றை கோமகி நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கின்றது. ஒன்றிற்கு இரண்டாக கோமகி எக்ஸ்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் ரூ. 99,999க்கே வாங்கிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே இதுவாகும். ஆனால், கோமகி இரண்டு யூனிட்டுகளை ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் விற்பனைக்கு வழங்க முன் வந்திருக்கின்றது. ஒரு யூனிட்டாக வாங்குவதைவிட இரண்டு யூனிட்டாக வாங்கினால் ரூ. 6 ஆயிரம் வரை தள்ளுபடியில் அந்த இரண்டு யூனிட்டுகளையும் வாங்கிக் கொள்ள முடியும்.

இது குறுகிய கால சலுகை மட்டுமே ஆகும். ஏப்ரல் 1 ஆம் தேதியோடு இந்த சலுகை முடிய இருப்பதா நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இதேபோல், இந்த சலுகையை சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டே அறிவித்திருக்கின்றது, கோமகி எலெக்ட்ரிக். பெண்களை இதன் வாயிலாக ஈர்க்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் திட்டம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த சூழலிலேயே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் ரெண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்க முன் வந்திருக்கின்றது கோமகி நிறுவனம். ஆகையால், எக்ஸ்3 மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 19:50 [IST]
English summary
Komaki launches x3 series electric scooters for women riders starting at rs 52999
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X